Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வயிறு குலுங்க சிரிக்க ரெடியா… குக் வித் கோமாளி சீசன்3 விரைவில்!
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. மாமியார் மருமகள் சண்டை, குடும்பத்தை கெடுக்கும் வில்லி என சீரியல்களை பார்த்து பார்த்து நொந்துபோனவர்களுக்கு வித்தியாசமாக சரவணன் மீனாட்சி, ராஜா ராணி , பகல் நிலவு என இளவட்டங்களும் விரும்பி பார்க்கும் அளவுக்கு சீரியல்களை கொடுத்த பெருமை விஜய் டிவிக்கே உண்டு.
அதே போல கலக்கப்போவது யாரு, பிக் பாஸ் என அனைத்து ரியாலிட்டி ஷோக்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. இவை அனைத்தையும் விட மிகவும் ஹிட்டடித்த நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி.
அனைவரையும் மகிழ்வித்த குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிகப்பெரிய வெற்றி
குக்வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும் போது என்னமோ, அது சாதாரண சமையல் நிகழ்ச்சி என்று தான் பார்க்கப்பட்டது. ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயமே சமையல் நிகழ்ச்சியிலே கோமாளியை புகுத்தி சிரிக்க வைத்ததுதான் இந்த நிகழ்ச்சியில் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்.
மக்கள் ரசித்தனர்
சீசன் 1ல், வனிதா விஜயகுமார், உமா ரியாஸ், ரேகா, பாலாஜி, ரம்யா பாண்டியன் உட்பட பலர் போட்டியாளர்களாக இருந்தனர். இவர்களுக்கு உதவுவதற்கு கோமாளிகளாக புகழ், பாலா,மணிமேகலை, ஷிவாங்கி இருந்தனர். போட்டியாளர்கள் காமெடியில் கலக்குராங்கனாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷன் பட் அதைவிட கலகலனு பேசுவாங்க இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவங்களும் ஒரு முக்கிய காரணம்.
கனி வெற்றி பெற்றார்
முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து சீசன் 2 ஒளிபரப்பானது. இதில், ஷகிலா, தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, பாபா பாஸ்கர், தீபா, மதுரை முத்து, அஸ்வின் என பலர் இதில் இடம் பெற்று இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி மற்றும் அஸ்வின் அவர்களின் கலாட்டா மிகவும் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் கனி வெற்றி பெற்றார்.
சீசன் 3 விரைவில்
இந்நிலையில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ரசித்த குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி இன்னும் 3 மாதத்தில் தொடங்கி விடும் என்று தெரிகிறது. இந்த மகிழ்ச்சியான ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.