Cook with Comalai 4 : குக் வித் கோமாளி ரக்ஷனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக்கான பேன்ஸ்!

சென்னை : குக் வித் கோமாளி தொகுப்பாளரான ரக்ஷனின் சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி வாயை பிளந்தனர்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.

இதில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட்டும், தொகுப்பாளராக ரக்ஷன் உள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 4

குக் வித் கோமாளி சீசன் 4

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்குகளாக விசித்ரா, ஷெரின், மைம் கோபி, கிஷோர், காளையன், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் அய்யப்பா, விஜே விஷால், சிவாங்கி, ஆன்டிரியான் ஆகியோர் இருந்தனர். இதில் கிஷோர் முதல் நபராக வெளியேறினார். இதையடுத்து, காளையன்,ராஜ் அய்யப்பா ஆகியோர் அடுத்தடுத்த எபிசோடில் வெளியேறினர்.

புதிய கோமாளிகள்

புதிய கோமாளிகள்

குக் வித் கோமாளி சீசன் நான்கின் கோமாளிகளாக புகழ்,சுனிதா, குரேஷி என்ற பழைய கோமாளிகளும் ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் கதாநாயகி ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா என பலர் இந்த சீசனில் புதிய கோமாளிகளாக வந்துள்ளனர். அவர்களில் மணிமேகலை இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென வெளியேறி விட்டார். மேலும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாலா, விஜய் டிவியில் கலக்கக்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

ரக்ஷனின் சம்பள விவரம்

ரக்ஷனின் சம்பள விவரம்

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் நான்கின் தொகுப்பாளராக உள்ள நடிகர் ரக்ஷனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குக் வித் கோமாளி சீசன் 3ல் ஒரு லட்சம் சம்பளம் வாக்குவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவருக்கு சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து விஜய் டிவியில்

தொடர்ந்து விஜய் டிவியில்

விஜய் டிவி தொகுப்பாளரான ரக்ஷன் ஜாக்லினுடன் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இந்த காமெடி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து இவர் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் துல்கர் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு படவாய்ப்பு சரியாக அமையாததால் தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக உள்ளார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X