மணிமேகலை - பிரியங்கா பிரச்னையில் இதுதான் நடந்தது.. யாருமேல தப்புனு சொல்லுங்க? ரூட்டை மாற்றும் குரேஷி

சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்னை என்றால் அது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னைதான். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் குக்காக இருந்த பிரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பெரும் பிரச்னையாக உருவெடுத்து, நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறும் அளவிற்கு பஞ்சாயத்து முற்றியது. அதன் பின்னர், மணிமேகலை தரப்பில் அறிக்கை அதைத் தொடர்ந்து வீடியோ என பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக உள்ள குரேஷி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இந்தப் பதிவில் காணலாம்.

manimegalai

குரேஷி கூறியதாவது, "திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன தினத்தில்தான் பிரச்னை தொடங்கியது. திவ்யா துரைசாமி ஒவ்வொருவர் குறித்தும் பேசினார். அதன் பின்னர் பிரியங்கா திவ்யா துரைசாமி குறித்து பேசலாமா எனக் கேட்டார். அதற்கு ரக்‌ஷன் ஓ.கே எனக் கூறினார். ஆனால் மணிமேகலை எதுவுமே கூறவில்லை. ஒரு சைகை கூட காட்டவில்லை. திவ்யா துரைசாமி இந்த சீசன் முழுவதும் தன்னுடன் பயணித்து குறித்து பிரியங்கா பேசினார். உடனே குறுக்கிட்ட மணிமேகலை, நீங்க பேசவேண்டாம் பிரியங்கா, ஏற்கனவே நீங்கள்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி என பேசி வருகின்றனர். எனவே, வேண்டாம் எனக் கூறினார்.

manimegalai

அதிர்ச்சி: மணிமேகலை இப்படிக் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு குடும்பமாக இருக்கும் இடத்தில் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பிரியங்காவோ நான் திவ்யா துரைசாமி குறித்து பேசவேண்டும் எனக் கூறுகின்றார். ஆனால் வேண்டாம் என மணிமேகலை மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக கூறியதால், பிரியங்கா ஹர்ட் ஆகி வெளியேறுகின்றார். இப்படித்தான் அந்த வாரம் ஷூட்டிங் நடந்தது.

manimegalai

முடியாதுனு சொன்ன மணிமேகலை: அதன் பின்னர் அடுத்த வாரம் ஷூட்டிங் தொடங்கும்போது கடந்த வாரத்தில் நடந்த விஷயங்கள் குறித்து ஒருமுறை பேசிவிட்டு, ஷூட்டிங்கைத் தொடங்கிவிடலாம் என பிரியங்கா நினைத்தார். குறிப்பாக ஒரு சக போட்டியாளராக என்னுடைய பேச்சுரிமை அங்கு தடுக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த நினைத்துள்ளார். இப்படியான நிலையில், இதுகுறித்துதான் பிரியங்கா பேசினார். ஆனால் மணிமேகலை அதனை ஏற்கவில்லை. நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. என்னால் அப்படி செய்யமுடியாது எனக் கூறிவிட்டு, கேரவனுக்குச் சென்றார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஷூட்டிங்கே நடக்கவில்லை.

manimegalai

சுயமரியாதை: நான் அங்கு இருந்தவரையில், நான் விசாரித்த வரையில் மேனேஜ்மெண்ட்டோ, பிரியங்காவோ யாருமே மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை. மணிமேகலை சுயமரியாதை எனும் விசயத்தை இங்கு எடுத்து வருகின்றார். இங்கு அனைவருக்கும் சுயமரியாதை உள்ளது. பிரியங்காவை பேச அனுமதித்திருக்கலாம். உங்கள் இருவருக்கும் பிரச்னை இருக்கின்றது என்றால் அதனை, அவரிடம் தனியாக பேசியிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. தனியாக பேசியிருந்தால், பிரியங்காவும் இந்த விஷயத்தை வேறுவிதமாக அனுகியிருக்கூடும். அன்றைக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சின்னத்திரை செலிபிரிட்டீஸ், குக் வித் கோமாளிக்கு வந்தால் ஜாலியாக இருக்கும் என நினைத்தோம், ஆனால் இப்படி சண்டையெல்லாம் நடக்கின்றது எனக் கூறினார்கள். இதுதான் அன்றைக்கு நடந்தது" என குரேஷி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

manimegalai

ரூட்டை மாற்றும் குரேஷி: இந்த வீடியோவைப் பார்த்த பலர், மணிமேகலைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பிரச்னை தொடங்கி கிட்டத்த 5 நாட்களுக்குப் பின்னர் குரேஷி இதுபோல பேசுகின்றார். யாராவது பேசச் சொன்னார்களா? பிரச்னையின் ரூட்டையே குரேஷி மடை மாற்றுகின்றார் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக, பிரியங்கா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X