வயசான வல்கர் தாத்தாவை செருப்பால அடிக்கனும்.. மணிமேகலை - பிரியங்கா விவகாரம் குறித்து வெங்கடேஷ் பட்!
சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்னை என்றால் அது, விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னைதான். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் குக்காக இருந்த பிரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பெரும் பிரச்னையாக உருவெடுத்து, நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறும் அளவிற்கு பஞ்சாயத்து முற்றியது. அதன் பின்னர், மணிமேகலை தரப்பில் அறிக்கை அதைத் தொடர்ந்து வீடியோ என பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக உள்ள குரேஷி, இதற்கு முன்னர் குக் வித் கோமாளியில் இருந்த வெங்கடேஷ் பட்டை பேட்டி எடுத்தார். அப்போது வெங்கடேஷ் பட் மிகவும் கோபமாக பேசினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே குரேஷி தான் பேசி வெளியிட்ட வீடியோவில், “திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன தினத்தில்தான் பிரச்னை தொடங்கியது. திவ்யா துரைசாமி ஒவ்வொருவர் குறித்தும் பேசினார். அதன் பின்னர் பிரியங்கா திவ்யா துரைசாமி குறித்து பேசலாமா எனக் கேட்டார். அதற்கு ரக்ஷன் ஓ.கே எனக் கூறினார். ஆனால் மணிமேகலை எதுவுமே கூறவில்லை. ஒரு சைகை கூட காட்டவில்லை. திவ்யா துரைசாமி இந்த சீசன் முழுவதும் தன்னுடன் பயணித்தது குறித்து பிரியங்கா பேசினார். உடனே குறுக்கிட்ட மணிமேகலை, நீங்க பேசவேண்டாம் பிரியங்கா, ஏற்கனவே நீங்கள்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி என பேசி வருகின்றனர். எனவே, வேண்டாம் எனக் கூறினார்.

அதிர்ச்சி: மணிமேகலை இப்படிக் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு குடும்பமாக இருக்கும் இடத்தில் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என அனைவருக்கும அதிர்ச்சியாக இருந்தது. பிரியங்காவோ நான் திவ்யா துரைசாமி குறித்து பேசவேண்டும் எனக் கூறுகின்றார். ஆனால் வேண்டாம் என மணிமேகலை மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக கூறியதால், பிரியங்கா ஹர்ட் ஆகி வெளியேறுகின்றார். இப்படித்தான் அந்த வாரம் ஷூட்டிங் நடந்தது.
முடியாதுனு சொன்ன மணிமேகலை: அதன் பின்னர் அடுத்த வாரம் ஷூட்டிங் தொடங்கும்போது கடந்த வாரத்தில் நடந்த விஷயங்கள் குறித்து ஒருமுறை பேசிவிட்டு, ஷூட்டிங்கைத் தொடங்கிவிடலாம் என பிரியங்கா நினைத்தார். குறிப்பாக ஒரு சக போட்டியாளராக என்னுடைய பேச்சுரிமை அங்கு தடுக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த நினைத்துள்ளார். இப்படியான நிலையில், இதுகுறித்துதான் பிரியங்கா பேசினார். ஆனால் மணிமேகலை அதனை ஏற்கவில்லை. நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. என்னால் அப்படி செய்யமுடியாது எனக் கூறிவிட்டு, கேரவனுக்குச் சென்றார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஷூட்டிங்கே நடக்கவில்லை.

சுயமரியாதை: நான் அங்கு இருந்தவரையில், நான் விசாரித்த வரையில் மேனேஜ்மெண்ட்டோ, பிரியங்காவோ யாருமே மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை. மணிமேகலை சுயமரியாதை எனும் விசயத்தை இங்கு எடுத்து வருகின்றார். இங்கு அனைவருக்கும் சுயமரியாதை உள்ளது. பிரியங்காவை பேச அனுமதித்திருக்கலாம். உங்கள் இருவருக்கும் பிரச்னை இருக்கின்றது என்றால் அதனை, அவரிடம் தனியாக பேசியிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. தனியாக பேசியிருந்தால், பிரியங்காவும் இந்த விஷயத்தை வேறுவிதமாக அனுகியிருக்கூடும். அன்றைக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சின்னத்திரை செலிபிரிட்டீஸ், குக் வித் கோமாளிக்கு வந்தால் ஜாலியாக இருக்கும் என நினைத்தோம், ஆனால் இப்படி சண்டையெல்லாம் நடக்கின்றது எனக் கூறினார்கள். இதுதான் அன்றைக்கு நடந்தது" என குரேஷி அந்த வீடியோவில் பேசியிருந்தா.

செருப்பால் அடிக்க வேண்டும்: இந்நிலையில் குரேஷி வெங்கடேஷ் பட்டை பேட்டி எடுத்தார். அந்த பேட்டியின் தொடக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன என குரேஷி கேள்வி எழுப்புகின்றார். இந்தக் கேள்விக்கு வெங்கடேஷ் பட் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, இந்தப் பிரச்னை இருவரது தனிப்பட்ட பிரச்னை. இருவரும் பேசி தீர்த்துக் கொள்ளவேண்டிய விஷயம். மணிமேகலையும் பிரியங்காவும் தங்களது விடாமுயற்சியால், உழைப்பால் இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார்கள். இந்த விவகாரம் தொடர்பாக பேசக்கூடியவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசினால் பரவாயில்லை. ஆனால் அவர்களது கடந்த காலம் தொடர்பாக ஏதேதோ பேசுகின்றார்கள். அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் எனக் கூறினார். அப்போது குறிக்கிட்ட குரேஷி வயசான வல்கர் தாத்தா ஒருவர் இருக்கின்றார் எனக் கூறினார். அதற்கு வெங்கடேஷ் பட், வயசான வல்கர் தாத்தாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் செருப்பால் அடிக்கவேண்டும் என கோபமாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் குரேஷி குறிப்பிட்ட வயசான வல்கர் தாத்தா யாரென்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











