ப்ரோமோ வீடியோ வந்தாச்சு...குக் வித் கோமாளி அஸ்வினின் புதிய பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா ?

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, இளம் பெண்களின் கனவு நாயகனாக மாறி உள்ளவர் அஸ்வின் குமார். இவர் சமீபத்தில் 'குட்டி பட்டாஸ்' என்ற தலைப்பில் பாடல் வீடியோ ஒன்றில் நடித்திருந்தார். அவருடன் பிகில் படத்தில் நடித்த ரேபா மோனிகா ஜானும் நடித்திருந்தார்.

இந்த பாடல் இசை ரசிகர்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் தாறுமாறான வரவேற்பை பெற்றது. குக்கூ பாடலுக்கு பிறகு அதிகமானவர்கள் பார்த்து ரசித்த பாடல் இது தான். இளைஞர்கள் பலர் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அஸ்வினின் புதிய வீடியோ ரெடி

அஸ்வினின் புதிய வீடியோ ரெடி

இந்நிலையில் அஸ்வின் நடித்த அடுத்த இசை வீடியோ ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு 'கிரிமினல் க்ரஷ்' என பெயரிட்டுள்ளனர். இதற்கு காட்சன் இசையமைத்துள்ளார். இவர் பார்வை திறனற்றவர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடி உள்ளது தான்.

அஸ்வினுக்கு ஜோடி இவரா

அஸ்வினுக்கு ஜோடி இவரா

இந்த பாடலில் அஸ்வினுடன், கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இந்த பாடலை, நீரஜ் எம்.ஜெயக்குமார் தயாரித்துள்ளார். எம்ஜிஎம் தான் இதற்கு பாடல் எழுதி உள்ளார். இந்த பாடலில், சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா ஜெயசீலன் தான் பெண் குரல் கொடுத்துள்ளார்.

எப்போ ரிலீஸ் தெரியுமா

இந்த பாடல் ஏப்ரல் 16 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதுவும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியின் போது ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ப்ரோமோ வீடியோ வெளியீடு

ப்ரோமோ வீடியோ வெளியீடு

ஏப்ரல் 16 அன்றே யூட்யூப் மற்றும் பிற முன்னணி ஆடியோ ஓளிபரப்பு தளங்களிலும் இந்த பாடலை ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்த பாடல் ரிலீசை முன்னிட்டு புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோவில், இந்த பாடல் உருவாக்கப்பட்ட காட்சிகள், கம்போசிங்கின் போது காட்சனுடன் அஸ்வின் பேசியது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X