சிவகார்த்திகேயன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்!
சென்னை: சிவகார்த்திகேயன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் படத்திலும் குக் வித் கோமாளி பிரபலம் இணைந்துள்ளார்.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. தனது கீச் குரலால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார் ஷிவாங்கி. இதில் அவரது பர்ஃபாமஸை கண்டுகளிக்கவே ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது.

குக் வித் கோமாளி சேட்டை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கியும் புகழும் செய்த சேட்டைகள் அந்நிகழ்ச்சிக்கு பெரும் பலமாக இருந்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பார்த்த ஷிவாங்கிக்கும் குக் வித் கோமாளியில் வெளிப்பட்ட ஷிவாங்கிக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசத்தை உணர்ந்தனர் ரசிகர்கள்.

படத்தில் நடிக்கும் வாய்ப்பு
ஷிவாங்கிக்குள் இவ்வளவு ஹியூமர் சென்ஸ் உள்ளதா என்று வியக்க வைத்தது குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஷிவாங்கிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

உதயநிதி ஸ்டாலின் படம்
சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஒப்பந்தமானார் ஷிவாங்கி. இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஷிவாங்கி. அதாவது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஷிவாங்கி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எண்ணிக்கை
ஷிவாங்கி ஏராளமான குறும்படங்களிலும் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஷிவாங்கியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











