Don't Miss!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- News
எருது விடும் விழா தடை.. அண்ணாமலை கோபம்.. தமிழர்கள் கலாசாரங்களை தடுப்பதாக கொந்தளிப்பு
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Finance
அதானியின் ஒற்றை முடிவு.. 22% சரிவினைக் கண்ட அதானி எண்டர்பிரைசஸ்.. மற்ற பங்குகள் நிலை?
- Technology
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எஸ்.பி.பி சரண் குழுவில் சிவாங்கி..விஜய் டிவியில் இருந்து எங்கேயோ போயிட்டாங்களே!
சென்னை : குக் விக் கோமாளி புகழ் சிவாங்கி டொரெண்டோவில் நடைபெற இசை நிகழ்ச்சிக்காக எஸ்.பி.பி சரண் குழுவில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார் ஷிவாங்கி.
தற்போது சிவாங்கி ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.
பொளக்கட்டும் பற பற.. பொன்னியின் செல்வன்.. அடுத்த பாடல் அந்த ஹீரோவுக்கா? எப்போ வருது தெரியுமா?

ஷிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பானது.

குக் வித் கோமாளி
இந்த சீசன் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். முதலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது சமையல் நிகழ்ச்சியில் கோமாளிக்கு என்ன வேலை என நினைக்க வைத்தது. ஆனால், இந்த நிகழ்ச்சி பலரின் கவலையை மறந்து சிரிக்கவைக்கும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் மற்றும் தாமு காமெடியிலும் கலக்கினார்கள்.

போட்டோஷூட்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி அந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிகர்களை மகிழ்வித்தார். பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி, அவ்வப்போது விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எஸ்.பி.பி சரணுடன்
இந்நிலையில், பல்வேறு இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வரும் ஷிவாங்கி தற்போது கனடாவில் நடைபெற்றுவரும் ராகா ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டொரெண்டோ சென்றுள்ளார். அங்கு, எஸ்.பி.பி சரண் குழுவுடன் இணைந்து நிகழ்ச்சிக்காக ரிகசல் எடுத்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.