குக் வித் கோமாளி சீசன் 5.. ஷாலின் ஜோயாவின் அலப்பறை வேறலெவலில் இருக்கே!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிடிஎஃப் வாசனின் தோழியான ஷாலின் ஜோயாவும் ஒரு குக்காக இருக்கிறார். அவர் செய்வதை எல்லாம் பார்க்கும் போது உண்மையில் இவருக்கு சமைக்க தெரியுமா என்கின்ற சந்தேகம் வருகிறது. இவர், இந்த நிகழ்ச்சியில் யாருக்குமே மரியாதை கொடுக்காமல் பேசி வருகிறார். இது தற்போது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் சீரியல், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த அளவிக்கு மக்களிடம் வரவேற்பு இருக்குமோ அதே அளவிற்கு, குக் வித் கோமாளிக்கு ரசிகர்கள் இருப்பதால், நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செஃப் தாமு, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக உள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன்5: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரக்ஷனும் மணிமேகலையும் உள்ளனர். நடிகை சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, யூடியூபர் இர்ஃபான், அக்ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த சீசனில் குக்குகளாக களமிறங்கி உள்ளனர். கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர்.
அலப்பறை: இதில் சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஷாலின் ஜோயா, தனக்கு கோமாளியாக வந்த தங்கதுரையை மலையாளத்தில் கடுமையாக திட்டி இருக்கிறார். ஜோயா மீன் சமைக்க தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்க, தங்கதுரை வேறு ஒரு டேபிளுக்கு சென்றதால் கடுப்பான ஜோயா, மலையாளத்தில் பட்டி, பண்டம், அதாவது நாயே, அயோக்கியனே வாடா உன்னை இங்கதானே நிற்க சொன்னேன் என்று வாய்க்கு வந்தபடி திட்டி உள்ளார்.
குவியும் கண்டனம்: அதே போல நேற்றைய எபிசோடில், செப் தாமுவை டா என்று அழைத்தார். அதே போல, தாமு மற்றும் ரங்கராஜ் அவர் சமைத்த உணவில் இருக்கும் குறையை சொல்லிக் கொண்டு இருக்கும் போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஷாலின் ஜோயா நடுவர்கள் இருவரையும் பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தார். அதே போல மற்ற குக்குகளும், கோமாளிகளும் எதாவது நெகட்டிவாக சொன்னால், அவர்களிடம் ரூடாக நடந்து கொண்டு அவர்களை கடுமையாக திட்டிவிடுகிறார். இதனால், சக போட்டியாளர்கள் என்னடா இது வம்பா போச்சு என்று அவரிடம் இருந்து சற்று தள்ளி உள்ளனர்.
நாஞ்சில் விஜயன்: என்னதான் ஜோயாவிற்கு தமிழ் தெரியவில்லை என்றாலும், என்ன பேசுகிறோம் என்று யோசித்து பேச வேண்டும். சக மனிதனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கக் கூட தெரியாதா என ஜோயா மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இதே மாதிரி ஒரு பிரச்சனையால் நாஞ்சில் விஜயன் இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கே வரமாட்டேன் என்று வெளியே போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











