குக் வித் கோமாளி பாலா காமெடியில் மட்டுமல்ல படிப்பிலும் டாப்பர்... வைரலாகும் மார்க் புகைப்படம்!

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு டிஆர்பி யில் முன்னணிக்கு வந்தது குக் வித் கோமாளி.

இதில் முதல் மற்றும் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக வந்து கலக்கியவர் பாலா.

தனித்துவமான கவுண்ட்டர்கள் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வந்த பாலா பத்தாம் வகுப்பில் எடுத்த மார்க் பேனர் புகைப்படம் சமூக வலைதளத்தில் செமயாக வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

வெற்றியாளராக மகுடம்

வெற்றியாளராக மகுடம்

புதுப் புது நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு பிடிக்கின்ற வகையில் ஒளிபரப்பி வரும் விஜய் டிவியில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருப்பவர் பாலா. பல தோல்விகள் அவமானங்களை கடந்து கலக்க போவது யாரில் வெற்றியாளராக மகுடம் சூடிய இவர் இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

டைமிங் மற்றும் ரைமிங் உடன் அனைவரையும் பாகுபாடில்லாமல் கலாய்க்கும் இவரது தனித்துவமான காமெடிக்கு பல லட்ச ரசிகர்கள் உள்ளனர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளியில் கோமாளியாக வந்து அங்கும் தனது காமெடி கவுண்ட்டர்களின் மூலம் அனைவரையும் சிரிக்கவைத்த பாலா தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பங்கேற்று பட்டையை கிளப்பினார்.

படிப்பிலும் டாப்பர்

படிப்பிலும் டாப்பர்

தொலைக்காட்சியைத் தொடர்ந்து படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். ஜூங்கா, தும்பா, காக்டெய்ல், புலிகுத்திப் பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு அடுத்தடுத்த படங்களும் வெளியாக உள்ளது. விஜய் டிவியில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்திருக்கும் பாலா காமெடியில் மட்டுமல்ல படிப்பிலும் டாப்பர் என நிரூபித்துள்ளார்.

வைரலாகும் மார்க் பேனர்

வைரலாகும் மார்க் பேனர்

பாலா பத்தாம் வகுப்பில் எடுத்த மார்க் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். முதல் மதிப்பெண் 491 என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பள்ளி நிர்வாகம் பேனர் வைத்து பெருமை படுத்தியுள்ளது. இந்த பேனர் புகைப்படம் தான் இப்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதுவரை காமெடியனாக பார்க்கப்பட்டு வந்த பாலா பத்தாம் வகுப்பில் 490 மார்க் எடுத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் வியப்புடன் இனிமே நீங்க காமெடியன் இல்ல ஹீரோ என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X