70 நாள் தலைமறைவு.. பிக் பாஸ் போட்டியாளர்களை பங்கம் பண்ணிய குக் வித் கோமாளி பிரபலம்.. சூப்பர் புரமோ!
சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள நிலையில், அதன் அடுத்த சூப்பரான புரமோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்களை குக் வித் கோமாளி பிரபலமான பாலா சும்மா திருவிளையாடல் ஸ்டைலில் புகுந்து கலாய்ப்பது வேற லெவல் என்டர்டெயின்மென்ட்
சிலரையும் பங்கமாக கலாய்த்தும், சிலரிடம் சேஃபா எஸ்கேப் ஆகியும் அவர் பேசிய புரமோ தற்போது வைரலாகி வருகிறது.

முடிந்த கல்யாணம்
முடிந்த கல்யாணத்துக்கு மேளம் அடிப்பது போல, கிராண்ட் ஃபினாலேவுடன் முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்களை வைத்துக் கொண்டு பிக் பாஸ் கொண்டாட்டம் எனும் ஷோவை நடத்தி மீண்டும் டிஆர்பியை சம்பாதிக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது.

குக் வித் கோமாளி சூப்பர்
இந்த சீசன் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளி நல்ல என்டர்டெயின்மென்ட்டாக இருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து இருந்தனர். தொடர்ந்து அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாகவும் மாறி வருகின்றனர். 100 நாட்களாக பலரும் உர்ருன்னு முகத்தை வைத்துக் கொண்டு ஃபன்னே இல்லாமல் இந்த சீசன் பிக் பாஸ் சென்றதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கேபிஒய் பாலா
இந்நிலையில், கலக்கப் போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி பிரபலமான கேபிஒய் பாலா பிக் பாஸ் போட்டியாளர்களை மரண பங்கம் பண்ணும் அதிரடியான பிக் பாஸ் கொண்டாட்ட புரமோ தற்போது வெளியாகி உள்ளது. திருவிளையாடல் படத்தில் சிவாஜியும் நாகேஷும் பேசுவது போல ஒன் லைனர் பஞ்சாக நிஷா கேட்க கேட்க பாலா கொடுக்கும் கவுன்ட்டர் சரவெடி.

கோவமா இருப்பாங்க
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து இருக்கியாடா என நிஷா கேட்க, நான் நிறைய எபிசோடு பார்த்திருக்கேனே என பாலா சொல்வதே செம காமெடியா இருக்கு. அதை தொடர்ந்து எவிக்ஷன் அன்னைக்கு என நிஷா கேட்க, எல்லாரும் கோவமா இருப்பாங்க என பாலா பஞ்ச் கொடுக்க அரங்கமே அதிர்கிறது. சாட்டர்டே அன்னைக்கு என நிஷா கேட்க, பார்க்க பாவமாக இருப்பாங்கன்னு பஞ்ச் மேல் பஞ்ச் கொடுத்துக் கொண்டே போகிறார்.

தாய்ப்பாசம்
அப்ப நம்ம ஆஜீத் என கேட்க எனக்கென்னன்னு இருப்பாரு என டோட்டல் டேமேஜ் செய்த பாலாவிடம் அர்ச்சனா பெயரை சொன்னதும் நமக்கெதுக்கு பிரச்சனை என்பது போல பம்மி தாய்ப்பாசம் என சொல்லி தப்பித்துக் கொண்டார். சம்யுக்தா யாரை பார்த்தாலும் மொறைப்பாங்கன்னும், சனம் யார் பேச வந்தாலும் கேமராவ மறைப்பாங்க என்றும் கலாய்த்துள்ளார்.

சேம் டு யூ
சனம் ஷெட்டியை கேபிஒய் பாலா கலாய்தததும் முதல் ஆளாக எழுந்து நின்று பாலாஜி முருகதாஸ் கைதட்ட, பாலா சேம் டு யூ என பாலாவுக்கும் ஒரு பஞ்ச் போட்டு விட்டார். ஆனால், அப்போது அங்கே சனம் ஷெட்டி இல்லாதது குறிப்பிடத்தக்கது. பாலா எக்ஸர்சைஸ், சுரேஷ் தாத்தா டிரிபிள் எக்ஸர்சைஸ் என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

அனிதா அழுவாங்க
டிசம்பர் மாசத்துல எப்போ வேணா மழை வரும், நம்ம அனிதா சம்பத் கண்ணுல எப்போ வேணா அழ வரும் என அனிதாவையும் வச்சு கலாய்த்து விட்டார். சோம் அமைதியின் சிகரம் என்றும் ரியோ பிரச்சனை வந்த நகரும் என்றும் ஒன் லைன் பஞ்ச்களை அள்ளி வீசினார்.

70 நாள் தலைமறைவு
எல்லாரையும் கலாய்ப்பியா என நிஷா கேட்டு விட்டு எங்க ரம்யா பாண்டியன் என கேட்க ஒளிவு மறைவு என்றார். ஜித்தன் ரமேஷ் என்றதும் 70 நாள் தலைமறைவு, என் தலைவன் டா என ஒரே போடாக போட்டு விட்டார். கடைசியாக எங்க ஆரி என கேட்டதும் விறுவிறுப்பு என்று சொன்ன பாலா நிஷாவை பார்த்து அருவருப்பு என்று கொளுத்திப் போட்டு சென்றுள்ள புரமோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











