சிவகாசி மக்களின் அன்பே தனி தான்.. ரசிகர்கள் வெள்ளத்தால் நெகிழ்ந்து போன குக் வித் கோமாளி புகழ்!

சென்னை: சினிமா பிரபலங்களுக்கு நிகராக சீரியல் பிரபலங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏனென்றால் தினமும் தங்கள் வீட்டுக்கே வந்து அவர்களை மகிழ்விப்பவர்கள் பெரும்பாலும் சின்னத்திரை பிரபலங்களாகவே உள்ளனர்.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த சீசனில் பிரபலமாக பார்க்கப்பட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

கோமாளி புகழ்

கோமாளி புகழ்

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த புகழ் ரசிகர்கள் மனங்களில் பச்சக் என ஒட்டிக் கொண்டார். மினி யோகி பாபு போல இருக்கும் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்யும் அரட்டைகள் ரசிகர்களை சிரிக்க வைத்தன. நடிகை ஷகிலா, ஷிவாங்கி உள்ளிட்டோருடன் புகழ் பண்ண அலப்பறைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

டான் படத்தில்

டான் படத்தில்

லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள டான் படத்தில் புகழ் கமீட் ஆகியுள்ளார். மேலும், ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமீட் ஆகி வருகிறார் புகழ். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு சமீப காலமாக பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை புகழ் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது கார் வாங்கியாச்சு

புது கார் வாங்கியாச்சு

தனது பரம்பரையிலேயே இதுவரை யாரும் கார் வாங்கியதில்லை என நெகிழ்ச்சியோடு சமீபத்தில் புதிதாக வாங்கிய காரை ஓட்டிக் கொண்டே புகழ் சொன்ன வீடியோ ரசிகர்களை நெகிழச் செய்தது. பிக் பாஸ் பிரபலங்களை போலவே, குக் வித் கோமாளி பிரபலங்களும் பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு வருகின்றனர்.

சிவகாசி மக்கள்

இந்நிலையில், சமீபத்தில் சிவகாசிக்கு சென்ற குக் வித் கோமாளி புகழை ஏகப்பட்ட ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. தன் மீது மக்கள் காட்டும் அன்புக்கு ஈடாக என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை என்றும் புகழ் உருக்கமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

பிளாக்‌ஷிப் விருது

பிளாக்‌ஷிப் விருது

பிளாக்‌ஷிப் யூடியூப் சேனல், டிஜிட்டல் விருது விழா என ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது விழா நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சிவகார்த்திகேயன், வெற்றிமாறன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். புகழ், சிவாங்கி உள்ளிட்ட குக் வித் கோமாளி பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. அன்பு தங்கை சிவாங்கியுடன் புகழ் இருக்கும் போட்டோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X