படுத்த படுக்கையாக இருக்கும் ஷிவாங்கி.. என்ன ஆச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களின் இதயம் தொட்டவர் ஷிவாங்கி.

இவரது க்யூட் பர்பார்மென்ஸ் மூலம் இவருக்கு இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகிறது.

தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்டுவரும் ஷிவாங்கி, பல சேலஞ்ச்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறார்.

நடிகை ஷிவாங்கி

நடிகை ஷிவாங்கி


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் ஷிவாங்கிக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் ஷிவாங்கி. குறிப்பாக குக் வித் கோமாளியில் கோமாளியாக அடுத்தடுத்த எபிசோட்களில் சிறப்பான செயல்பாடுகளை கொடுத்திருந்தார்.

ஷிவாங்கியின் காதல் கலாட்டா

ஷிவாங்கியின் காதல் கலாட்டா

சக கோமாளிகள் மற்றும் குக்குகளுடன் இணைந்து இவர் செய்த லூட்டிகள் மிகப்பிரபலம். குறிப்பாக 2வது சீசனில் அஸ்வினுடன் இணைந்து காதல் கலாட்டா செய்திருந்தார் ஷிவாங்கி. அவர் உண்மையிலேயே காதலிக்கிறாரா என்ற வகையில் அனைவரையும் குழப்பினார்.

குக்காக சிறப்பு

குக்காக சிறப்பு

தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறி, தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் பல்வேறு டாஸ்க்குகளையும் சிறப்பாக முடித்து வெற்றி பெற்று வருகிறார். இவருக்குள் இத்தனை திறமைகள் இருந்தும் கோமாளியாக ரசிகர்களை கோமாளியாக்கினாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அடுத்தடுத்த வேலைகளில் பிசி

அடுத்தடுத்த வேலைகளில் பிசி

சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி மூலம் படங்களில் பாடும் வாய்ப்புகளும் ஷிவாங்கிக்கு கிடைத்து வருகிறது. படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். தனியாக ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். உள்ளூர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரிகளில் பங்கேற்று வருகிறார்.

படுத்த படுக்கையாக ஷிவாங்கி

படுத்த படுக்கையாக ஷிவாங்கி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பிசியாக காணப்படுகிறார். இவ்வாறு நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிவரும் ஷிவாங்கி, கடந்த இரு தினங்களாக தான் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், சளி மற்றும் ஜுரம் வாட்டி வருவதாகவும் பதிவிட்டுள்ளார். தன்னால் எழுந்திருக்கக்கூட முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்களின் அன்பிற்கு நன்றி

ரசிகர்களின் அன்பிற்கு நன்றி

குக் வித் கோமாளி ஷோ பார்த்துவிட்டு ரசிகர்கள் கொடுத்த அன்பான கமெண்ட் தன்னை மீண்டும் எழ வைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ரசிகர்களின் அன்பு இல்லாமல் தான் ஒன்றுமே இல்லை என்றும் ஷிவாங்கி தெரிவித்துள்ளார். தற்போது அதிகமாக ஜுரம் பரவுவதால் பாதுகாப்பாக மாஸ்க் அணிந்து வெளியில் செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்களின் செல்லமாக மாறியுள்ள ஷிவாங்கியின் இந்தப் பதிவிற்கு ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சூப் மற்றும் சுடுநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X