குக்கிங் மட்டுமல்ல.. "குத்து"ம் தெரியும்.. நடுத் தெருவில் இறங்கி.. அதிர வைத்த பவித்ரலட்சுமி!

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ர லட்சுமி. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இறுதி போட்டியாளர்களில் 5 பேரில் இவரும் ஒருவர்.

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் 5 மணி நேர நிகழ்ச்சியாக இன்று ஒளிபரப்பப்பட உள்ளது.

Cooku With Comali Pavithra Lakshmis kuthu dance goes viral

இறுதிப் போட்டியில் கனி, அஸ்வின், பவித்ரா, பாபா பாஸ்கர், ஷகீலா ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் அதிகம் உருவாகி உள்ளனர்.

இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் பவித்ர லட்சுமிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பவித்ர லட்சுமி நடிக்க உள்ளார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பவித்ர லட்சுமி பங்கேற்க உள்ளதை அடுத்து நடுரோட்டில் அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பவித்ர லட்சுமி யார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்த போது 2020 ல் எடுக்கப்பட்ட வீடியோவாம்.

பவித்ர லட்சுமி நல்ல டான்ஸர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்படி குத்தாட்டம் போட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பவித்ர லட்சுமி சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X