குக் வித் கோமாளி 4.. சிவாங்கிக்கு பதிலா என்ன துரத்திட்டாங்களா? விளாசிய கிஷோர்!

சென்னை : சிவாங்கிக்கு பதிலா என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள் என்று இணையத்தில் வெளியாகி உள்ள செய்தியால், கிஷோர் கடும் அதிருப்தியில் உள்ளார்.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் அளவு வரவேற்பை பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு, குக் வித் கோமாளி சீசன் 1 வெளியானதை தொடர்ந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதில் கோமாளிகளாக வந்த புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோரின் அட்டகாசத்தை ரசித்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி, தமிழ் நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என புகழ் பெற்றது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார், இரண்டாவது சீசனில் அகத்தியனின் மகள் கனி டைட்டிலை தட்டிச்சென்றார். மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகா அர்ஜுன் டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட அஸ்வின், தர்ஷா குப்தா, புகழ், சிவாங்கி, பவித்ரா என அனைவரும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 4

குக் வித் கோமாளி சீசன் 4

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 ஜனவரி 28 தொடங்கியது. குக்குளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் உள்ளனர். முதல் முறையாக சிவாங்கி, குக்காக மாறி அசத்தி வருகிறார்.

கிஷோர் வெளியேறினார்

கிஷோர் வெளியேறினார்

இதில் காளை,ஷெரின்,கிஷோர் ஆகியோர் எலிமினேட் லிஸ்டில் இருந்த நிலையில், காளையன் மற்றும் ஷெரின் காப்பாற்றப்பட்ட நிலையில், கிஷோர் முதல் நபராக எலிமினேட் ஆகி வெளியேறினார். அவர் வெளியேறியதை அடுத்து, இணையத்தில், சிவாங்கிக்கு பதிலா என்ன துரத்திட்டாங்க என்றும், குக் வித் கோமாளியை கழுவி ஊற்றிய கிஷோர் என்றும் செய்திகள் வெளிவந்தன.

தப்பான செய்தி

தப்பான செய்தி

இந்த செய்திகளால் கடுப்பான கிஷோர் எல்லாமே தப்பான செய்தி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரொம்ப ஆர்வமாக காத்துக் கொண்டு இருந்தேன். எனக்கு சமையல் பெருசா தெரியாது, இருந்தாலும், சமாளித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், ஓரளவுக்கு வரும் சமையலை வைத்து இந்த நிகழ்ச்சியில் சமாளிப்பது கஷ்டம் என்பதை தெரிந்து கொண்டேன். உண்மையில் அந்த செட்டை நான் மிஸ் பண்ணுவேன். இந்த நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்தது சிவாங்கி என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X