குக் வித் கோமாளி சீசன் 4… இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

சென்னை : விஜய் டிவி சீரியல் என்றாலும், ரீயாலிட்டி ஷோக்கள் என்றாலும், காமெடி நிகழ்ச்சிகள் என்றாலும் அது வேறுமாதிரியாக இருக்கும். இதனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு என்றே தனிக்கூட்டம் உண்டு.

இந்த வகையில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெறும் நகைச்சுவைக்கு அளவே இல்லை.

வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிந்த நிலையில், நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில்,இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4

குக் வித் கோமாளி சீசன் 4

குக் வித் கோமாளி சீசன் 4, முந்தைய சீசன்களைப் போல கொஞ்சம் கூட சுவாரசியம் குறையாமல் கடந்த மாதம் 29ந் தேதி முதல் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை, சுனிதா, ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிச சிவா, குரோஷி உள்ளிட்டோர் கோமாளிகளாக அலப்பறை கொடுத்து வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த சீசனில் ஜி.பி.முத்து புதிய கோமாளியாக நுழைந்துள்ளார்.

10 போட்டியாளர்கள்

10 போட்டியாளர்கள்

அதேபோல, குக்காக நடிகை ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், சிவாங்கி, ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட், மைம் கோபி என பத்து பேர் குக்குகளாக உள்ளனர். நடந்து முடிந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறி உள்ளார்.

குக்காக மாறிய ஷிவாங்கி

குக்காக மாறிய ஷிவாங்கி

ஷிவாங்கி குக்காக மாறியது மட்டுமில்லாமல், வகை வகையாக சமையல் செய்து செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்டிடம் பாராட்டை பெற்று வருகிறார். ஆனால், நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்த அதே வேலை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் விஜய் டிவி செய்து வருகிறது. இந்த சீசனின் வின்னராக ஷிவாங்கி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சிறப்பு விருந்தினர் ஹன்சிகா

சிறப்பு விருந்தினர் ஹன்சிகா

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஹன்சிகா மோத்வானி வந்துள்ளார். திருமணம் ஆன பிறகு ஹன்சிகா முதல்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால், ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

இரண்டாவது எலிமினேஷன்

இரண்டாவது எலிமினேஷன்

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவதாக வெளியேற போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில், விஷால் மற்றும் மைம் கோபி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில், மைம் கோபி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X