The Eagle Is Coming.. வலி ஆறிவிட்டது.. கெத்தாக போஸ்ட் போட்ட குக் வித் கோமாளி பிரியங்கா
சென்னை: தனியார் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. அந்த சேனலில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். அந்த சீசனை மணிமேகலை தொகுத்து வழங்கினார். ஆனால் தனது வேலையில் பிரியங்கா அதீதமாக தலையிடுகிறார் என்று சொல்லி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் மணிமேகலை. இந்தச் சம்பவம் பெரும் பேசுபொருளாகியிருக்கும் சூழலில் பிரியங்கா இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் 5க்குள் இருக்கும் சேனல்களில் ஒன்று விஜய் டிவி. அதில் தொகுப்பாளராகவோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோ தமிழ்நாடு முழுக்க பிரபலமானவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கோபிநாத், திவ்ய தர்ஷினி என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். சிவகார்த்திகேயன் இப்போது டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வந்துகொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா: விஜய் டிவி மூலம் பிரபலமானவர்களில் பிரியங்காவும் ஒருவர். அவர் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அப்ளாஸை அள்ளியவர். தனது நகைச்சுவைத்தனமான பேச்சாலும், டைமிங் காமெடிகளாலும் நிகழ்ச்சியை போர் அடிக்காமல் நகர்த்தி செல்வார்.
பிக்பாஸ்: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார். அதில் அவர் ஓரளவு நன்றாக விளையாடினாலும் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. இருந்தாலும் அவருக்கென்று பலர் ரசிகர்களாக மாறினர். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகும் தனது ஆங்கர் பணியை சிறப்பாக தொடர்ந்துவந்தார் பிரியங்கா.
உருவான பஞ்சாயத்து: ஆனால் சமீபத்தில்அவரை சுற்றி ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் அவர் கோமாளியாக பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியை மணிமேகலைதான் தொகுத்து வழங்கினார். சூழல் இப்படி இருக்க தனது தொகுப்பாளர் பணியில் பிரியங்கா அதீதமாக தலையிடுகிறார் என்று சொல்லி அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் மணிமேகலை. இந்தச் சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பேசுபொருளானது.
பிரியங்கா போஸ்ட்: சூழல் இப்படி இருக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் டைட்டிலை வென்றார் பிரியங்கா. டைட்டில் வென்ற கையோடு அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழுகு இறக்கைகளுடன் புகைப்படத்தை பகிர்ந்து, "சிறகுகள் கொண்ட பெண் அன்பு நிறைந்த இதயத்துடன் எல்லையே இல்லாத உள்ளத்துடன் வாழ்வில் உயர்வார். ஒவ்வொரு காயமும் ஆறிவிட்டது. என் வளர்ச்சிக்கு ஒவ்வொரு கண்ணீர் துளியும் உதவியது. நான் எழுவது எனக்காக மட்டுமில்லை. கனவுகளை நோக்கி, ஒளியை நோக்கி செல்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











