தாத்தா வராரே கதறவிடப் போறாரே.. இந்தியன் தாத்தா கெட்டப்புக்கு வந்த சோதனை.. குதிரையில் கூல் சுரேஷ்!
சென்னை: இந்தியன் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு வெளியான நிலையில், ரோகிணி தியேட்டர் முன்பாக நடிகர் கூல் சுரேஷ் குதிரை மீது இந்தியன் தாத்தா கெட்டப்பில் வந்து ரசிகர்களை சந்தித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 5000+ ஸ்க்ரீன்களில் வெளியானது. தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இந்தியன் 2 படம் வெளியானது.

காலை முதலே சோஷியல் மீடியாவில் இந்தியன் 2 படம் பற்றிய விமர்சனங்களும் விவாதங்களும் களைகட்டி வரும் நிலையில், வழக்கம் போல கூல் சுரேஷ் தியேட்டரில் தனது அலப்பறையை ஆரம்பித்துள்ளார்.
இந்தியன் 2 வெளியானது: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியானது. 6 ஆண்டுகளாக உருவாகி வந்த படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்ததே கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து தக் லைஃப் மற்றும் இந்தியன் 3 படங்களும் கமல் நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது. கடந்த மாதம் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் கமல் வில்லனாக மிரட்டியிருந்தார்.

குதிரையில் கூல் சுரேஷ்: இந்தியன் தாத்தா கெட்டப்பில் கையில் டம்மி கத்தியுடன் கூல் சுரேஷ் ரோகிணி தியேட்டருக்கு தனது ரசிகர்களுடன் வந்து, "தாத்தா வராரு.. கதறவிடப் போறாரு" என படத்திற்கான புரமோஷனை செய்திருந்தார். குதிரையில் ஏன் வந்தேன் என்றால், பல போராட்டங்களை செய்தவர்கள் எல்லாம் குதிரையில் வந்தவர்கள் தான். இந்த படம் வெளியாக ஷங்கரும், கமல்ஹாசன் சாரும் பல போராட்டங்களை சந்தித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரித்த லைகா சுபாஷ்கரன் சாரின் போராட்டம் ரொம்ப பெரிது, அதான் குதிரையில் வந்தேன் என்றார். படத்தை தியேட்டரில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க இந்தியன் படத்தை நானெல்லாம் சிறு வயதில் பார்த்தேன் எனக் கூறியுள்ளார். இந்தியன் தாத்தா மாதிரி இல்லை கூர்கா மாதிரி இருக்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்: காசி தியேட்டரில் காலை 9 மணிக்கு இந்தியன் 2 போடப்பட்ட நிலையில், பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடிய காட்சிகளும் வெளியாகி உள்ளன. விக்ரம் படம் அளவுக்கு இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா? இந்தியன் 2 என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் திரையில் என்ன பண்ணி வச்சிருக்காங்க என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications