Cool Suresh: “அவரெல்லாம் அட்வைஸ் பண்றார்... Youtubers ஹெல்ப் பண்ணுங்க” கண்ணீர் விட்ட கூல் சுரேஷ்!
சென்னை: சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் நடந்துகொண்டது சர்ச்சையானது.
அதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் கழுத்தில் திடீரென மாலை போட்டது வைரலானது.
இதனால் கூல் சுரேஷ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அவர் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது யூடியூபர்ஸிடம் பண உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கண்ணீர்விட்ட கூல் சுரேஷ்: சிம்புவின் நண்பராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் கூல் சுரேஷ். தொடர்ந்து சிம்புவுடன் பல படங்களில் நடித்த கூல் சுரேஷ், தற்போது வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமா ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதேபோல், முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது, FDFS பார்க்க குதிரையில் வந்து அலப்பறை செய்து வந்தார்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் நடித்துள்ள சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷும் பங்கேற்றார். அப்போது அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளருக்கு திடீரென மாலை போட்டு அதிர்ச்சிக் கொடுத்தார். கூல் சுரேஷ் செய்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கூல் சுரேஷின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும் மன்னிப்புக் கேட்டும் வீடியோ வெளியிட்டார் கூல் சுரேஷ். என்னால் நடித்து பெரிய ஆளாக வர முடியவில்லை என்பதால் ஏதோ கிறுக்குத்தனமா சில வேலைகளை செஞ்சு பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். ஜாலியாக தான் நான் மாலை போட்டேன். அந்த தவறை உணர்ந்து தற்போது மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என வீடியோவில் பேசியிருந்தார்.
அதேபோல், சரக்கு இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யாவும் கூல் சுரேஷை கண்டித்து பேட்டிக் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது தனக்கு உதவி செய்யுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார் கூல் சுரேஷ். அதாவது நான் செய்தது தவறுதான், அதற்காக பலரும் கண்டனம் தெரிவித்து அட்வைஸ் செய்தனர். பிரபலம் ஒருவரது மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்கு நான் பண உதவி செய்திருந்தேன். ஆனால், அவரெல்லாம் இப்போது எனக்கு அட்வைஸ் செய்கிறார்.
என்னுடைய அந்த வீடியோவை யூடியூப்பில் போட்டு பல யூடியூப் சேனல்கள் பணம் சம்பாதித்துள்ளனர். எனது வீடியோ பல மில்லியன் வீயூஸ் வரை போனது. ஆனால், சரக்கு இசை வெளியீட்டு விழா சர்ச்சையால் இப்போது எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதனால், ரொம்பவே கஷ்டத்தில் உள்ளேன். இதனை புரிந்துகொண்டு யூடியூபர்ஸ் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்யவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
எனது செல் நம்பர் நிறைய யூடியூபர்ஸிடம் உள்ளது. அவர்கள் எனக்கு உதவி செய்வார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இனிமேல் அப்படிப்பட்ட தவறுகளிலும் ஈடுபட மாட்டேன் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார் கூல் சுரேஷ். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











