Cool Suresh: பிக் பாஸ் வீட்டில் சேட்டையைத் தொடங்கிய கூல் சுரேஷ்... கட்டம் கட்டிய ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நேற்று முதல் தொடங்கியது.

இந்த சீசனில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார்.

Cool Suresh: Cool Suresh atrocities are trending in the Bigg Boss house

கடந்த சீசனில் ஜிபி முத்து போல, இந்தமுறை கூல் சுரேஷ் தான் பிக் பாஸ் என்டர்டெயினர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதனை நிரூபிக்கும் விதமாக முதல் நாளிலேயே தனது சேட்டையைத் தொடங்கியுள்ளார் கூல் சுரேஷ்.

பிக் பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் அட்ராசிட்டி
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். 7வது சீசனில் பங்கேற்றுள்ள 18 போட்டியாளர்களை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்திய கமல், அவர்களுக்கு வாழ்த்துக் கூறி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். இவர்களில் முதல் ஆளாக என்ட்ரி கொடுத்தது கூல் சுரேஷ் தான்.

சிம்புவின் நண்பரான கூல் சுரேஷ், சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாததால், திரைப்பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு வருகிறார். வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்த போடு எனத் ரைமிங்காக பேசத் தொடங்கிய கூல் சுரேஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக ட்ரோல் மெட்டீரியலாகவும் கன்டெண்ட் கிங்காகவும் வலம் வருகிறார்.

சமீபத்தில் கூட சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பெண் தொகுப்பாளர் கழுத்தில் மாலை போட்டு சர்ச்சையில் சிக்கினார். பின்னர் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டு வீடியோவும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் என கூல் சுரேஷை அறிமுகப்படுத்தினார் கமல். ஆனால், மேடையில் ஏறியதுமே வைப்ரேஷன் மோடில் இருந்த கூல் சுரேஷ், ஆனந்த கண்ணீர் வடித்து ஆக்டிங்கில் ஆண்டவருக்கே டஃப் கொடுத்தார்.

பின்னர் பிக் பாஸ் வீட்டினுள் சென்ற கூல் சுரேஷ், முதல் கேப்டனாக பொற்றுப்பேற்றதோடு, அதனை அடுத்த சில நிமிடங்களிலேயே இரண்டாவது போட்டியாளராக சென்ற பூர்ணிமா ரவிக்கு விட்டுக்கொடுத்தார். அப்போதும் கேப்டன்சி பேட்ஜ்ஜை கையில் கட்டிவிட சொன்ன பூர்ணிமா ரவியிடம், "நீயே கட்டிக்கோம்மா... எதுக்கு வம்பு.." என கூல் சுரேஷ் எஸ்கேப் ஆனது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சிறிது நேரம் அமைதியாக இருந்த கூல் சுரேஷ், முதல் நாளிலேயே ஃபுல் ஃபார்முக்கு வந்துவிட்டார்.

Cool Suresh: Cool Suresh atrocities are trending in the Bigg Boss house

சீசன் 7ன் போட்டியாளர்கள் 18 பேரும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியானதும், ட்ரெஸ் கேட்டு வெயிட்டிங்கில் இருந்தனர். அப்போது எல்லோரும் சேர்ந்து கூல் சுரேஷை டிரிக்கர் செய்ய, "வெந்து தணிந்தது காடு... வீட்டுக்குள்ள துணிய தூக்கிப் போடு" என பிக் பாஸுக்கே ரைம்மிங்காக பஞ்ச் வைத்தார். உடனே போட்டியாளர்களின் உடைகள் வர, "என்னோட பவர் தெரிஞ்சுதா" என கூல் சுரேஷ் மீண்டும் வைப்ரேஷன் மோடுக்கு வந்துவிட்டார்.

இன்னொரு பக்கம் கூல் சுரேஷுக்கு முதல் நாளில் இருந்தே மீம்ஸ்கள் வரத் தொடங்கிவிட்டன. கடந்தாண்டு ஜிபி முத்து போல, இந்தாண்டு கூல் சுரேஷ் என ரசிகர்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். அதேபோல், 'சுப்ரமணியபுரம்' சமுத்திரகனியின் மீம்ஸுடன், "ஹலோ பிக் பாஸ், லியோ ரிலீஸ் வரைக்கும் கூல் சுரேஷை உள்ளேயே வச்சுக்கோங்க" என கேப்ஷன் கொடுத்து பங்கம் செய்து வருகின்றனர். ஆக பிக் பாஸ் சீசன் 7ல் ட்ரோல் மெட்டீரியலாக கூல் சுரேஷ் உருவெடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X