நாட்டை குட்டிச்சுவராக்கி வச்சிருக்கீங்க.. சிங்கப்பெண் சீருடை சர்ச்சை.. கூல் சுரேஷூக்கு கண்டனம்!

சென்னை: நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ், சமீபகாலமாக திரைப்பட விமர்சனங்கள் மற்றும் ஆடியோ லான்ச் போன்ற சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் உடைகளை அணிந்து வந்து கேமராக்களை தன் பக்கம் திருப்புவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது அவர் கலந்து கொண்ட 'ஆட்டி' படத்தின் விளம்பர நிகழ்ச்சி அணிந்து வந்திருந்த உடை சமூக வலைத்தளங்களிலும் புயலைக் கிளப்பியுள்ளது.

'ஆட்டி' பட விழாவிற்கு வந்த கூல் சுரேஷ், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சிறப்புப் பிரிவான 'சிங்கப்பெண் அதிரடி படை'யின் அதிகாரப்பூர்வ சீருடையை ஒத்த ஒரு ஆடையை அவர் அணிந்து வந்திருந்தார். ஒரு அரசு அமைப்பின், அதுவும் பெண்கள் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய பிரிவின் சீருடையை சினிமா விளம்பரத்திற்காக இப்படிப் பயன்படுத்தியதை அங்கு செய்தியாளர்களை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Cool Suresh Actor

கடுப்பான கூல் சுரேஷ்: பிரஸ் மீட்டின் போது செய்தியாளர்கள் அவரிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு மதிப்பிற்குரிய சிறப்புப் பிரிவின் சீருடையை, இப்படித் திரைப்பட விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவது தவறு இல்லையா? இது அந்தப் படையையே இழிவுபடுத்துவது போல் இருக்கு என நேரடியாகக் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்வியால் பயங்கரமாகக் கடுப்பான கூல் சுரேஷ், செய்தியாளர்களிடம் ஆக்ரோஷமாக வாதாடத் தொடங்கினார். இது எப்படி இழிவுபடுத்துவது ஆகும்? நான் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தித்தான் இந்த உடையை அணிந்து வந்துள்ளேன். உங்களைப் போன்ற ஆட்கள்தான் ஒரு நல்ல விஷயம் செய்தாலும், அதை மாற்றி மாற்றிப் பேசி நாட்டை குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறீர்கள். நான் கத்தி எடுக்கிறேன் என்றால், அது ஆப்பிள், ஆரஞ்சு பழத்தை வெட்டுவதற்காகத்தான் இருக்கும். ஆனால், நீங்க நான் கழுத்தை வெட்டுவதற்காகத்தான் கத்தி எடுத்தேன் என்று எப்படிச் சொல்ல முடியும் என்றார்.

குவியும் கண்டனங்கள்: கூல் சுரேஷ் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க முயன்றாலும், சமூக வலைத்தளங்களில் இவருக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு சூழலில், அதற்காக இருக்கும் 'சிங்கப்பெண்' படையின் சீருடையைக் கூல் சுரேஷ் போன்றவர்கள் தங்களின் சுய விளம்பரத்திற்காகக் கேலிப் பொருளாக்குவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X