Bigg Boss 7 Cool Suresh - மனைவியை நினைத்து கண் கலங்கிய கூல் சுரேஷ்.. அழ வைத்த பவா செல்லதுரை
சென்னை: Bigg Boss 7 Cool Suresh (பிக்பாஸ் 7 கூல் சுரேஷ்) பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் தனது மனைவியை நினைத்து கண்கலங்கியபடி பேசினார்.
தமிழ்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்திருக்கின்றன. இந்த சூழலில் கடந்த ஞாயிற்று கிழமை முதல் ஏழாவது சீசன் தொடங்கியிருக்கிறது. எப்போதும் இல்லாத மாதிரி இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடக்கிறது. பிக்பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என்று வீடுகள் அழைக்கப்படுகின்றன.

போட்டியாளர்கள்: கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கின்றன. இந்த சீசனில் பிரபலமான முகங்கள் இல்லையே என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ஆரம்பமே ட்விஸ்ட்: இரண்டு வீடுகளில் பிக்பாஸ் நடக்க்ப்போவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அது எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். மேலும், 18 போட்டியாளர்களில் பாதி பேர் ஒரு வீட்டிலும் மீதி பேர் இன்னொரு வீட்டிலும் இருப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் கேப்டனை கவராத ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ்.
கதை சொல்லிய பவா செல்லதுரை: ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றவர்கள் மட்டும்தான் சமைக்க வேண்டும்; க்ளீனிங் செய்ய வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸை பிக்பாஸ் விதித்தார். அதனையடுத்து நேற்றைய நாளின் முடிவில் பவா செல்லதுரை ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் வீட்டுக்கு வெளியே அமரவைத்து ஆதவன் எழுதிய ஓட்டம் என்ற கதையை கூறினார். அந்தக் கதை மிடில் கிளாஸ் பெண் தொலைத்த கனவை பற்றியதாக இருந்தது.
எமோஷனல் ஆன கூல் சுரேஷ்: அந்தக் கதையை பவா செல்லதுரை சொல்லிக்கொண்டிருக்கும்போதே பிரதீப் ஆண்டனி கண் கலங்கினார். கதையை பவா சொல்லி முடித்த பிறகு அழுதபடி பேசிய கூல் சுரேஷ், "நான் பத்தாவது வரைக்கும்தான் படித்திருக்கிறேன். எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் வீட்டுக்கு போவேன் வருவேன். ஆனால் என் மனைவி எனது பசங்களை அடிச்சு இதை படிக்கணும் அதை படிக்கணும்னு சொல்லி டியூஷனுக்கு கூட்டிட்டு போறது வரது என இருப்பார். ஆண்களாகிய நாமோரொம்ப ஜாலியா இருப்போம். மனைவி ஒருவனுக்கு ரொம்பவே முக்கியமான உறவு சார். நான் அனுபவப்பட்டதால சொல்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











