Cool Suresh: சுவர் எல்லாம் ஏறி குதிக்க வேண்டாம்.. கூல் சுரேஷை வீட்டுக்கு அனுப்பிய கமல்ஹாசன்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த சீசனுக்கு எண்ட் கார்டு போடப்படும் என தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் உள்ள எக்ஸ்ட்ரா டிக்கெட்டுகளையும் வேஸ்ட் லக்கேஜ்ஜுகளையும் டபுள் எவிக்ஷன் செய்து வருகின்றனர்.
இந்த வாரம் மிட் எவிக்ஷன் என்ற ஒன்றை வைத்து கூல் சுரேஷை வெளியே அனுப்புவார்கள் என்று பார்த்தால் அனன்யா ராவை அவுட் ஆக்கி விட்டனர்.
அப்போ இந்த வாரம் கமல் வந்து நிக்சனை வெளியே அனுப்புவாரா? அல்லது கூல் சுரேஷை அனுப்புவாரா? என ரசிகர்கள் டவுட் பட்டுக் கொண்டிருந்த நிலையில், கூல் சுரேஷ் தான் எந்த வாரம் எவிக்ட் ஆனவர் என்கிற தகவல் கசிந்துள்ளது.

ஏகப்பட்ட பிரச்சனை: இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி அதை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கே ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பி உள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு ரியாலிட்டி ஷோவில் எது நடந்தாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஹோஸ்ட் நடுநிலையாக நீதி வழங்கவில்லை என பிரதீப் வெளியேற்றப்பட்டதில் இருந்தே கமல் ஹெவியாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். பரிதாபங்கள் கோபி சுதாகர் பிரபல யூடியூப் சேனல் நிகழ்ச்சியிலேயே கமல் போல இமிடேட் செய்து கலாய்த்துள்ளனர்.
சுவர் ஏறி தப்பிக்க: இந்த வாரம் விசித்ராவுக்கும் கூல் சுரேஷுக்கும் இடையே பிரச்சனை நாமினேஷனின் போது வெடித்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இனிமேலும், தன்னால் இருக்க முடியாது என நினைத்த கூல் சுரேஷ் சுவர் எறி தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால், அவரை விஷ்ணு கீழே இறங்க சொன்ன நிலையில், கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸ் பேசினார்.
கூல் சுரேஷ் எவிக்டட்: இந்நிலையில், இந்த வாரம் நிக்சன் தான் குறைவான ஓட்டுக்களுடன் உள்ளார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் நிக்சனை காப்பாற்றி விட்டு சுவர் ஏறி குதிக்க முயற்சித்த காரணத்துக்காக கமல்ஹாசன் கூல் சுரேஷை வெளியே அனுப்பியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. நாளை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் குறைவான வாக்குகளுடன் வெளியேற்றப்பட்டார் எனக் கூறுவார்களா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











