நான் சொல்றது பொய்யா இருந்தா செருப்பால அடிங்க.. லைகர் படத்துக்காக ஆவேசமடைந்த கூல் சுரேஷ்!

சென்னை: எந்தவொரு புதிய படங்கள் வெளியானாலும் முதல் ஆளாக தியேட்டரில் படம் பார்த்து விட்டு பேட்டி கொடுத்து வருகிறார் காமெடி நடிகர் கூல் சுரேஷ்.

Recommended Video

Liger Review | என்ன வம்புல மாட்டி விடுறீங்களா? - Cool Suresh

சிம்புவின் ரசிகரான கூல் சுரேஷ் அதிதி ஷங்கருக்கு லவ் லெட்டர் கொடுத்து பின்னர் மன்னிப்பு கேட்ட நிலையில், அடுத்ததாக லைகர் படத்துக்கு இப்படியொரு புரமோஷன் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

தான் சொல்வது பொய்யா இருந்தா தன்னை செருப்பால் அடிக்கவும் என ஆவேசமடைந்து அவர் பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

நெகட்டிவ் விமர்சனங்கள்

நெகட்டிவ் விமர்சனங்கள்

லைகர் படத்துக்கு பாலிவுட் முதல் டோலிவுட் வரை ஒட்டுமொத்த ரசிகர்களும் விமர்சகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை போட்டுத் தாக்கி வருகின்றனர். இந்தியில் இப்படியொரு படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா அறிமுகம் ஆகியிருக்க வேண்டாம் என்றும் இயக்குநர் புரி ஜெகநாத் நல்லா ஏமாற்றி விட்டார் என்றும் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

செருப்புடன் கூல் சுரேஷ்

செருப்புடன் கூல் சுரேஷ்

ஒவ்வொரு புதிய படத்துக்கும் கூல் சரேஷ் தியேட்டரில் தொண்டைக் கிழிய கத்தும் வீடியோக்கள் டிரெண்டாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரம்பு மீறி கையில் செருப்பை எடுத்துக் கொண்டு கூல் சுரேஷ் ஆவேசமாக லைகர் படம் பற்றி பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

பொய்யா இருந்தா அடிங்க

பொய்யா இருந்தா அடிங்க

"நான் சொல்றது பொய்யா இருந்தா செருப்பாலயே என்னை அடிங்க.. அப்படியொரு படம் இது.. இந்த படத்தை தமிழில் வெளியிட்டு வசூல் வரலைன்னாலும் பரவாயில்லை வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் ஆர்.கே. சுரேஷ்" என அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஒரே அலம்பல் பண்ணி உள்ளார் கூல் சுரேஷ்.

கொடுத்த காசுக்கு மேல கூவுறான்

கொடுத்த காசுக்கு மேல கூவுறான்

ஏற்கனவே லைகர் படத்தை பார்த்து பயங்கர கடுப்பில் வெளியே வந்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பார்த்து விட்டு கொடுத்த காசுக்கு மேல கூவுறான் என்றும் ஆர்.கே. சுரேஷை ஆனந்தப்படுத்த எப்படியெல்லாம் பேசுறார் பாருங்க என்றும் கமெண்ட் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதிதி விஷயத்தில் மன்னிப்பு

முன்னதாக விருமன் படம் வெளியான போது தியேட்டரில் அதிதி ஷங்கரை தான் காதலிப்பதாகவும் இயக்குநர் ஷங்கரிடத்திலேயே லவ் லெட்டர் கொடுப்பேன் என்றும் கூல் சுரேஷ் பேசியது சர்ச்சையை கிளப்பியது. பின்னர், அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டும், அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி என்றும் கூல் சுரேஷ் பல்டி அடித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X