Kaavaala: தமன்னா போல காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய கூல் சுரேஷ்.. வேறலெவல் ஃபன் கியாரண்டி!

சென்னை: ராயர் பரம்பரை படத்தை தியேட்டரில் பார்த்து விட்டு வெளியே ரசிகர்கள் மற்றும் யூடியூபர்களுக்கு முன்னிலையில் பேசிய கூல் சுரேஷ் திடீரென தமன்னா போல காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ ஓடுதோ இல்லையோ தியேட்டருக்கு வெளியே நடிகர் கூல் சுரேஷ் தனியாக ஒரு ஸ்பெஷல் ஷோவை நடத்தி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

விஜய்யின் லியோ பாடலுக்கு எதிராக கிளம்பிய சர்ச்சை குறித்தும் அந்த வீடியோவில் கூல் சுரேஷ் பேசிய நிலையில், ஒரே கல்லில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களை கவர் செய்துள்ளார்.

Cool Suresh grooves for Jailer Kaavala song in front of theater

மெர்சல் பார்த்து டாக்டராக மாறிட்டாங்களா: ராயர் படத்தின் முதல் காட்சியை பார்த்து முடித்து விட்டு வெளியே வந்து அந்த படம் சூப்பராக இருக்கிறது என யூடியூபர்கள் மற்றும் மீடியாக்களுக்கு வழக்கம் போல பேட்டியளித்த கூல் சுரேஷிடம் நடிகர் விஜய்யை ஏன் தொடர்ந்து பலரும் டார்கெட் செய்கின்றனர் என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது.

காய்த்த மரத்தில் தான் கல்லடி விழும்னு சொல்வாங்க, விஜய் சார் பெரிய நடிகர், அவர் பெயரை இழுத்தால் நாமளும் பிரபலம் ஆகலாம் என்கிற நோக்கில் சிலர் இப்படி செய்கின்றனர். என்றார். மேலும், உடனடியாக ஆவேசமான கூல் சுரேஷ் கில்லி படத்தில் விஜய் சார் கபடி பிளேயராக நடித்திருந்தார். அதை பார்த்து எல்லா ரசிகர்களும் கபடி பிளேயரா மாறிட்டாங்களா, மெர்சல் படத்தில் டாக்டராக நடித்திருந்தார். அதை பார்த்து அவரது ரசிகர்கள் எல்லாருமே டாக்டராக ஆகிட்டாங்களா, அது படம், ரியல் கிடையாது. இது ரசிகர்களுக்கு தெரியும் என பேசினார்.

தமன்னா போல டான்ஸ்: அடுத்ததாக ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டை பார்த்தீங்களா என்கிற கேள்விக்கு டக்குன்னு தமன்னா போலவே அந்த இடத்திலேயே டான்ஸ் ஆடி காட்டி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டார் கூல் சுரேஷ்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் கூல் சுரேஷை கூட குத்தாட்டம் போட வைத்து விட்டதே என ரசிகர்கள் அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X