அலப்பறை கிளப்பும் கூல் சுரேஷின் அடுத்த அவதாரம் இதுவா?.. என்னவெல்லாம் செய்யப்போறாரோ?
சென்னை: தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ். அவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிடவும் பட விழாக்களில் கலந்துகொண்டு பேசி ஃபேமஸ் ஆனவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட அவருக்கு வரவேற்பும் கிடைத்திருக்கிறது கண்டனங்களும் கிடைத்திருக்கிறது. முக்கியமாக சரக்கு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் தொகுப்பாளினிக்கு மாலை போட்ட விவகாரம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. இந்தச் சூழலில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் கூல் சுரேஷ். வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து சிம்புவின் படங்களுக்கு தீவிரமாக ப்ரோமோஷன் செய்துவருபவர். அவரது பேச்சு ரசிக்கும்படியாக இருந்தாலும் சில சமயங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகக்கூடியவை. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் சிம்புவின் படங்களுக்கு ப்ரோமோஷன் செய்வதையே தனது மூச்சாக கொண்டிருந்தார். அதனையடுத்து வெளியாகக்கூடிய எல்லா படங்களுக்கும் புரோமோஷனில் ஈடுபடுகிறார்.

சரக்கு: இந்த சூழலில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்திருக்கும் சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'இங்கு எல்லோருக்கும் மாலை போட்ட்டாங்க. ஆனால் ஒருத்தவங்களை மறந்துட்டாங்க. நம்மை வரவேற்பதற்காக விதவிதமான வார்த்தைகளை கண்டுபிடித்து பேசிய தொகுப்பாளினிக்கு யாராச்சும் மாலை போட்டீங்களா' என கேட்டு அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டார்.
மன்னிப்பு கேட்ட மன்சூர்: கூல் சுரேஷின் இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரைத் தொடர்ந்து பேச வந்த மன்சூர் அலிகானிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப; சுரேஷ் செய்தது தப்புதான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.அதேபோல் கூல் சுரேஷும், அந்தப் பெண்ணும் நானும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே பேசினோம் என கூற அதற்கு அந்தப் பெண்ணோ நான் ஒருவார்த்தைக்கூட உங்களிடம் பேசவில்லையே என சொல்ல கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார்.
கூல் சுரேஷின் மன்னிப்பு: இந்நிலையில் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டும், நடந்த சம்பவம் குறித்தும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய அவர், "சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதம் நடந்துவிட்டது. அந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டேன். ஆனால் பெண்ணுக்கு மாலை போடக்கூடாதாம். கலகலப்பாக இருக்க வேண்டும் என்றுதான் செயல்படுவேன். அப்படித்தான் அப்போதும் விளையாட்டுத்தனமாக செய்தேன்.விபரீதமாகிவிட்டது" என்று கூறினார்.
ஹீரோ சுரேஷ்: கூல் சுரேஷ் பிக்பாஸிலும் கலந்துகொண்டு நல்லபடியாக விளையாடினார். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி டிடிஎஃப் வாசன் நடிக்கவிருந்த மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக கூல் சுரேஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக யூட்யூபர் டிடிஎஃப் வாசன் இதில் கமிட்டாகியிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வந்தன. ஆனால் அவர் ஷூட்டிங்கிற்கே வருவதில்லை என்று சொல்லி அவரை படத்திலிருந்து நீக்கியிருக்கிறார் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











