Bigg Boss 7 - பசங்களா நல்லா படிங்கடா.. குழந்தைகளிடம் வேண்டுகோள் வைத்த கூல் சுரேஷ்..
சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கூல் சுரேஷ் தனது குழந்தைகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
பிக்பாஸ் ஏழாவது சீசன் ஆரம்பித்த இரண்டாவது நாளே கேப்டனை கவர தவறியதற்காக பவா செல்லதுரை, நிக்ஸன், வினுஷா, அனன்யா, ரவீனா, ஐஷு ஆகியோர் முதல் ஆறு பேராக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு ரூல்ஸை மீறியதன் காரணமாக விசித்திரா, யுகேந்திரன் ஆகியோ ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர்.

சர்ச்சையில் விசித்திரா: இந்த சீசனின் முதல் சண்டையை ஆரம்பித்து வைத்தவர் பிரதீப் ஆண்டனியாக இருந்தாலும் கடந்த சில நாட்களாகவே சர்ச்சையில் சிக்கிவருபவராக இருக்கிறார் விசித்திரா. முதலில் சக போட்டியாளரின் ஆடை குறித்து பேசியது; பிறகு அனன்யாவின் உடம்பில் இருக்கும் டாட்டூவை காட்ட சொன்னது என அவரது ஒவ்வொரு செயல்பாடும் ஹவுஸ் மேட்ஸ்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றது.
கல்வி பிரச்னை: சமீபத்தில் விசித்திராவிடம் அனன்யா ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள் என சொல்ல அதற்கு நீண்ட விளக்கம் அளித்தார் விசித்திரா. மேலும் படிப்பு பற்றி ஏன் பேச வேண்டும் என ஜோவிகா கேட்க அதற்கு விசித்திரா பதிலளிக்கும்போது ஜோவிகா உச்சக்கட்ட டென்ஷனுக்கு சென்றார். அதுமட்டுமின்றி கல்வி குறித்து எந்த புரிதலும் இல்லாமல் ஜோவிகா பேசுகிறார் என்றும் ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.
கமல் பேச்சு: சூழல் இப்படி இருக்க நேற்று ஹவுஸ் மேட்ஸுடன் கமல் ஹாசன் பேசினார். அப்போது அவர் படிப்பு தொடர்பான விஷயத்தை பேசும்போது படித்தால்தான் சாதிக்க முடியும் என்பதில்லை என்ற தொனியில் பேசினார். அதேசமயம் படித்தால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலைமையில் இருப்பவர்கள் படித்துதான் ஆக வேண்டும் எனவும் கூறியிருந்தார். கமலின் இந்தப் பேச்சு ஒருதரப்பினரை திருப்திப்படுத்தவில்லை. மேலும் கல்வி குறித்து கமல் ஹாசன் இப்படி பேசியிருக்கக்கூடாது எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனர்.
கூல் சுரேஷ் வேண்டுகோள்: இந்நிலையில் கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் இருந்தபடி தனது குழந்தைகளுக்கு வேண்டுகோள் வைத்தார். வீட்டில் இருக்கும் கேமராவை பார்த்து அவர் தனது குழந்தைகளின் பெயரை குறிப்பிட்டு, "பசங்களா நல்லா படிங்கடா. விசித்திரா சொல்றதை கேளுங்க. படிப்பு ரொம்ப முக்கியம். அவங்களே சொல்றாங்க பாருங்க படிச்சிருந்தா நடிகையாக ஆகியிருக்காமல் ஆஃபிஸராக ஆகியிருப்பேனு சொல்றாங்க.
நான் படிக்கல அதான் உங்களுக்கு சொல்லித்தர முடியல. அம்மா படிச்சிருக்காங்க அவங்க சொல்லித்தராங்க. நல்லா படிங்க. டியூஷன்லாம் ஒழுங்கா போங்க. காலேஜ் படிச்சிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் விசித்திராவின் கல்வி குறித்த பேச்சுக்கு கூல் சுரேஷ் முதலில் சப்போர்ட் செய்ய ஆர்மபித்திருக்கிறார். எனவே மேலும் பலர் புரிந்துகொள்வார்கள் என்று கூற ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











