சிம்புவை வைத்து ஆதாயம் தேடுகிறேனா? கோபத்தில் நடுக்கடலில் விழுந்த கூல் சுரேஷ்!
சென்னை : சிம்புவை வைத்து ஆதாயம் தேடுவதாக நிருபர் கூறியதால் ஆத்திரம் அடைந்த கூல் சுரேஷ் நடுக்கடலில் திடீரென குதித்தார்.
நகைச்சுவை நடிகரான நடிகர் கூல் சுரேஷ் சாக்லேட், சீறி, காக்க காக்க, இனிமேல் இப்படித்தான், நண்பேன்டா போன்ற படத்தில் நடித்துள்ளார்.
வில்லனாக அறிமுகமான கூல் சுரேஷ் படவாய்ப்பு இல்லாததால் நகைச்சுவை நடிகராக மாறினார்.

நடிகர் கூல் சுரேஷ்
சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் பெயர் அறிவிப்பு வந்தவுடன் தீவிரமாக ப்ரோமோஷன் வேலையில் இறங்கினார். எந்த செய்தியாளர் சந்திப்புக்கு சென்றாலும், வெந்துதணிந்தது காடு..படத்திற்கு வணக்கத்தை போடு என அவர் செய்த புரோமோஷன் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை அள்ளியது.

சிம்புவின் பத்து தல
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, பத்து தல திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்திற்கு செய்தது போலவே பத்து தல படத்திற்கும் ப்ரோமோஷன் செய்து வருகிறார். மேலும்,பத்து தல முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என்று கூறியிருந்தார்.

வித்தியாசமானவன்
படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளதால், வித்தியாசமாக படகில் பயணம் செய்து கொண்டே ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், கூல் சுரேஷ் என்றாலே வித்தியாசமானவன் என்று மக்கள் மனதில் பதிந்து விட்டது இதனால் தான் இந்த பேட்டியையும் கடலில் பயணம் செய்து கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் என்றார்.

மக்களின் அன்பு கிடைத்தது
இதையடுத்து,செய்தியாளர் எப்போதும் சிம்பு, சிம்பு என்கிறீர்கள், சிம்புவை வைத்து நீங்கள் ஆதாயம் அடைவதாக மக்கள் நினைக்கிறார்கள் என்றார். இதற்கு பதிலளித்த கூல் சுரேஷ், சிம்புவால் எனக்கு எந்த படவாய்ப்பும் கிடைக்கவில்லை, சிம்புவால் எந்தவிதமான பரிசும் எனக்கு கிடைக்கவில்லை, சிம்புவால் எனக்கு கிடைத்தது எல்லாம் மக்களின் அன்புதான்.

கடலில் குதித்த கூல் சுரேஷ்
பத்துதல இசைவெளியீட்டு விழாவிற்கு ஹெலிகாப்டரில் வருவேன் என்று சொல்வது எல்லாம் முட்டாள் தனமாக இருக்கு என்று செய்தியாளர் கூறியதால் ஆத்திரம் அடைந்த கூல் சுரேஷ், சிம்பு மீது வைத்திருக்கும் அன்பை சந்தேகப்படாதீங்க என்று நடுக்கடலில் குதித்துவிட்டார். இதையடுத்து அங்கிருந்த மீனவர்கள் கடலில் குதித்து கூல் சுரேஷை மீண்டும் படகிற்கு கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











