Kanguva: எனக்கு அப்பறம்தான் ஜோதிகா.. விதை நான் போட்டது.. சிறுத்தை சிவாவை அட்டாக் செய்த கூல் சுரேஷ்!
சென்னை: கங்குவா படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் பார்த்த சில ரசிகர்கள் படம் குறித்தும் படக்குழு குறித்தும் மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர். இது இணையத்தில் வேகமாக பரவியதால் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் நினைக்கின்றனர். இப்படியான நிலையில் படம் குறித்தும் படத்தின் நெகடிவ் விமர்சனங்கள் குறித்தும் படக்குழு குறித்தும் நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
சூர்யா - திஷா பதானி ஆகியோரது நடிப்பில் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. படத்தினை சிறுத்தை சிவா இயக்க, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வசூல் செய்யவில்லை. இந்நிலையில் படத்தின் விமர்சனங்கள் குறித்தும், படக்குழு குறித்தும் கூல் சுரேஷ் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

அதாவது, “ கங்குவா படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவை சிறுத்தை படத்தில் இருந்தே தெரியும், அதேபோல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவைய்ம் நீண்ட நாட்களாகத் தெரியும். ஆனால் இவர்கள் இருவருக்குமே என்னை இந்தப் படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால் நான் சாப்பிடுவது சினிமா சாப்பாடு என்பதால் கங்குவா படத்திற்கு பலரும் பலவிதமாக விமர்சனங்கள் முன் வைத்தனர். அப்படியான நிலையில், நான் தான் கங்குவா படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தேன்.
ஜோதிகா: நான் குரல் கொடுத்த பின்னர்தான், ஜோதிகாவே குரல் கொடுத்தாங்க. எனக்கு அப்பறம்தான் ஜோதிகாவே. விதை நான் போட்டது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரும்போது படத்தில் நடித்த யாருமே படத்திற்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால், கூல் சுரேஷ் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். விமர்சனங்கள் முறையாக வரவேண்டும் எனவும் நான் தான் பேசினேன்.
படம் பார்க்கவில்லை: நான் இப்போது ஒரு உண்மையைச் சொல்லுகின்றேன். நான் இதுவரை கங்குவா படத்தினைப் பார்க்கவில்லை. காரணம் படத்தினைப் பார்த்தால் அதில் இருக்கும் எதாவது கதாபாத்திரத்தில் நாம் நடித்திருக்கலாமே என்ற எண்ணம் வந்துவிடுமோ என்ற எண்ணத்தில்தான் படத்தினை இதுவரை பார்க்காமல் உள்ளேன். கங்குவா படத்தினையும் பார்க்கவில்லை அதேபோல், இதற்கு முன்னர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படத்தினையும் பார்க்கவில்லை” எனப் பேசினார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
வீடியோ: இவர் கூறியதைப்போல், கங்குவா படம் ரிலீஸ் ஆனபோது, கங்குவா படத்தினையும் படக்குழுவினரையும் மிகவும் மோசமாக மற்றும் அறுவருக்கத்தக்க வகையில் பலர் விமர்சித்தனர். அப்போது கூல் சுரேஷ், “ கங்குவா படம் பார்த்துவிட்டு பிடித்தால் பிடித்துருக்கு என்று கூறுங்கள். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூறுங்கள். அதைவிட்டுவிட்டு படக்குழுவினரை தரக்குறைவாக பேசுவது எந்தவகையில் சரி? படத்தினை விமர்சிக்க ஒரு வரைமுறை உள்ளது. படத்தை உரிய முறையில் விமர்சியுங்கள்” எனக் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











