பித்தள சொம்பை புளி போட்டு தேய்ச்ச மாதிரி பளபளன்னு இருக்காரு.. கூல் சுரேஷின் தி லெஜண்ட் விமர்சனம்!
சென்னை: லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தை பார்த்து விட்டு தனது கருத்துக்களை கூறியுள்ளார் நடிகர் கூல் சுரேஷ்.
புதிய படங்கள் வெளியான உடனே அதை பார்த்து விட்டு கூல் சுரேஷ் கொடுக்கும் விமர்சனத்தை காண ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆரம்பத்தில், படம் ஒரே போர் என பேச ஆரம்பித்த கூல் சுரேஷ் அப்படியே பல்டி அடித்து பேசியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

படம் ஒரே போர்
தி லெஜண்ட் திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த கூல் சுரேஷ் படம் ஒரே போர் என்றும், அண்ணாச்சிக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்றும் பேசியதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இப்படியெல்லாம் நெகட்டிவ்வா பேசுவேன்னு நினைச்சிங்களா, படம் வேற லெவல் லெஜண்ட்டு தெறிக்க விட்டுருக்காரு, வெந்து தணிந்தது காடு லெஜண்டுக்கு வணக்கத்தை போடு என தனது ஸ்டைலில் பேச ஆரம்பித்தார்.

எம்ஜிஆர் மாதிரி
லெஜண்ட் சரவணன் அப்படியே எம்ஜிஆர் மாதிரி தக தகன்னு மின்னுறாரு என்றும் எம்ஜிஆரை போலவே தனது படத்தின் மூலம் மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்வது சிறப்பான விஷயம் என்றும் பாராட்டித் தள்ளி இருக்கிறார். ஸ்க்ரீன் பக்கத்துக்கே சென்று அவரை தொட்டுப் பார்க்கக் கூட நினைத்தேன் என்றும் பேசி உள்ளார்.

பித்தளை சொம்பு
பித்தள சொம்பை புளி போட்டு தேய்ச்ச மாதிரி பளபளன்னு இருக்காரு லெஜண்ட் அண்ணாச்சி என மனதில் பட்டதையெல்லாம் பளிச்சென பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தி உள்ளார் கூல் சுரேஷ். ஹீரோயின்களை விடவும் இவர் தான் அழகாக ஒவ்வொரு ஃபிரேமிலும் அசத்துகிறார் எனப் பாராட்டி உள்ளார்.

சுகர் பேஷண்டுகளுக்காக
சக்கரை வியாதி நோயினால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற போராடும் கதாபாத்திரத்தில் லெஜண்ட் வெளுத்து வாங்கி இருக்கிறார். ஆக்ஷன், சண்டை, ரொமான்ஸ் காட்சிகள் என வெரைட்டி காட்டி நடித்திருக்கிறார். பாக்கியராஜ் எப்படி ஒரு மாதிரி ஆடுவாரோ, அதே போல, இந்த படத்தில் இவருடைய ஸ்டைலில் லெஜண்ட் ஆடி உள்ளார் என்றும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

தாராளமா பார்க்கலாம்
இதுதான் ரியல் பான் இந்தியா படம் என்றும் இந்த படத்தை தாராளமாக தியேட்டரில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கலாம் என்றும் பாசிட்டிவான விமர்ச்னங்களை கூல் சுரேஷ் கூறியுள்ள வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











