ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் மாஸ்ன்னு எப்படி சொல்லலாம்.. கூல் சுரேஷ் பேச்சு!

சென்னை: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ள நிலையில், படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த கூல் சுரேஷ் பேசிய பேச்சு டிரெண்டாகி வருகிறது.

அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் நடிப்பில் காமெடி கலந்த காதல் படமாக வெளியாகி உள்ளது பிரின்ஸ்.

தொடர்ந்து டாக்டர், டான் என ஆங்கிலத்திலேயே தலைப்பு வைத்து வரும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என மீண்டும் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளார். ஆனால், D சென்டிமென்ட் இந்த முறை மிஸ்ஸிங்.

சிரிப்பு

சிரிப்பு

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் இந்த தீபாவளிக்கு சிரிப்பு வெடியாக மாறி இருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வந்தாலும், ஜாலியாக சினிமாவை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்துடனான போட்டியில் யாருக்கு நாளை அதிக கலெக்‌ஷன் என்பதையும் வெயிட் பண்ணி பார்க்க வேண்டும்.

கூல் சுரேஷ் ஆஜர்

கூல் சுரேஷ் ஆஜர்

வெந்து தணிந்தது காடு படமே வெளியாகி விட்டது. ஆனால், இன்னமும் கூல் சுரேஷ் புதிய படங்கள் வந்தால் தியேட்டருக்கு முதல் நபராக ஆஜர் ஆகிவிடுகிறார். கூல் சுரேஷ் படத்தை பார்த்து விட்டு என்ன சொல்கிறார் என்பதை கேட்கவே ஒரு பெருங்கூட்டம் திரளத்தான் செய்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை பார்த்து விட்டு பேசிய பேச்சு டிரெண்டாகி வருகிறது.

ரஜினி, விஜய்க்கு அடுத்து

ரஜினி, விஜய்க்கு அடுத்து

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் வசூல் மன்னன் என மதுரை அன்புச்செழியன் பிரின்ஸ் புரமொஷன் விழாவில் பேசியிருந்தார். இந்நிலையில், அந்த பாயிண்ட்டையே வைத்துக் கொண்டு கூல் சுரேஷ் பிரின்ஸ் படத்தின் FDFS பார்த்து விட்டு பேசியுள்ளார்.

மிஸ்டர் அன்புச்செழியன்

மிஸ்டர் அன்புச்செழியன்

கூல் சுரேஷ் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் அவரிடம் மைக்கை நீட்டின. ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் என மிஸ்டர் அன்புச்செழியன் நீங்க எப்படி சொல்லலாம் என பொடி வைத்து பேசிய கூல் சுரேஷ், பின்னர் நீங்கள் சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க என படத்துக்கான புரமோஷன் வேலையை செய்துள்ளார்.

மச்சான் சிவகார்த்திகேயன்

மச்சான் சிவகார்த்திகேயன்

சிம்பு படத்துக்கு மட்டுமின்றி வெளியாகும் பல படங்களுக்கும் சென்று கூல் சுரேஷ் விமர்சிப்பது போல ஆதரவாகவே பேசி வருகிறார். மச்சான் சிவகார்த்திகேயன் தாறுமாறா நடிச்சிருக்கான்.. பிரின்ஸ் படத்தை கண்டிப்பா தீபாவளிக்கு குடும்பத்தோட பார்த்து கொண்டாடுங்க என கூல் சுரேஷ் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X