கோவாவுக்கு ஃபிளைட்ல போக முடியுது.. விஜய்யை வம்பிழுத்த கூல் சுரேஷ்.. அல்லு அர்ஜுனுக்கும் அட்டாக்!

சென்னை: வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கூல் சுரேஷ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது அல்லு அர்ஜுனுக்காக அத்தனை நடிகர்கள் ஓடோடி வராங்க ஆனால், உயிரிழந்த அந்த ரேவதி என்கிற பெண்ணுக்கும் மூளைச்சாவு அடைந்த அவருடைய மகன் பற்றியும் பேசக் கூட நடிகர்கள் தயாராக இல்லை என வெளுத்து வாங்கி உள்ளார்.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சூர்யா வணங்கான் படத்தில் இருந்து பாதியிலேயே கழண்டு கொண்டாலும் பாலாவுக்காக இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ரசிகர்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

vijay allu arjun cool suresh

சிவகார்த்திகேயன், சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்த பாலாவுக்கு பாராட்டு விழா நடத்தினர். அந்த விழாவுக்குச் சென்ற கூல் சுரேஷ் விஜய் குறித்தும் பேசியது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

அல்லு அர்ஜுன் செயலை கண்டிக்கிறேன்: அல்லு அர்ஜுன் ஒரு நாள் இரவு சிறைக்குச் சென்று வந்த நிலையில், சிரஞ்சீவி, ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா என வரிசையாக நடிகர்கள் நேரில் சென்று சந்திப்பதும் நானி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதுமாக இருந்தது. ஆனால், உயிரிழந்த ரேவதி என்கிற பெண்ணை பற்றி எந்தவொரு டோலிவுட் நடிகரும் பேசவே இல்லை. அவருடைய மகன் மூளைச்சாவு அடைந்திருக்கிறான் அவனை மருத்துவமனைக்குச் சென்று சந்திக்க அவர்களுக்கு நேரமில்லை. அந்த குடும்பத்துக்கு பண உதவி செய்வதெல்லாம் இருக்கட்டும், முதலில் நேரில் சென்று அந்த குடும்பத்தை பார்த்து ஆறுதல் கூற வேண்டுமா? இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவாவுக்கு பிளைட்ல போறாங்க: ரசிகர்கள் இல்லையென்றால் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தளபதி விஜய்யாக இருந்தாலும் அல்லு அர்ஜுனாக இருந்தாலும் ஒன்றுமே இல்லை. கோவாவுக்கு பிளைட்ல போறது, ஜாலியா டூர் போறது, சொகுசு காரில் செல்வது எல்லாமே ரசிகர்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து வெற்றிபெறச் செய்வதால் வரும் சொகுசு வாழ்க்கை தான் என்றும் ரசிகர்களை மதிக்காத எந்த நடிகரும் உருப்படவே மாட்டார்கள் என காட்டமாக பேசியுள்ளார். கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு விஜய், த்ரிஷா பிளைட்டில் கோவாவுக்கு போனதை சுட்டிக்காட்டி கூல் சுரேஷ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X