பாக்யராஜ் அஞ்சலியில் முருங்கைக்காய் பஞ்சாயத்து.. லாரன்ஸ் மாஸ்டரை இழுத்து கூல் சுரேஷ் காட்டம்!

சென்னை: மாரடைப்பால் உயிரிழந்த இயக்குனர் கே.பாக்யராஜின் உடல் நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது, ஒட்டுமொத்த திரையுலகமே கண்ணீரில் மூழ்கியிருந்தது. பல பிரபலங்களும் சோகத்துடன் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய நடிகர் கூல் சுரேஷ் அஞ்சலி செலுத்த வந்த விதம் இணையத்தில் பெரிய விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

கூல் சுரேஷ்: வழக்கமாகப் பட விழாக்களுக்கு விசித்திரமான உடைகள் மற்றும் பொருட்களுடன் வந்து "வெந்து தணிந்தது காடு..." என டயலாக் பேசி கவனம் ஈர்க்கும் கூல் சுரேஷ், இம்முறை பாக்யராஜின் இறுதிச்சடங்கிற்கு கையில் ஒரு பெரிய முருங்கைக்காய் கட்டை தூக்கிக்கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினார். பாக்யராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று, அந்த முருங்கைக்காய் கட்டை அங்கே வைத்து அவர் அஞ்சலி செலுத்திய வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். கூல் சுரேஷுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? ஒரு இறுதிச்சடங்கில் கூடவா இப்படி பப்ளிசிட்டி தேட வேண்டும்? ஒரு மூத்த கலைஞனை அவமானப்படுத்தும் வகையில் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று கமெண்ட் பாக்ஸ்களில் அவரை வறுத்தெடுத்தனர்.

Cool Suresh Bhagyaraj

பாக்யராஜ் தண்டிப்பார்: இந்தக் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளித்த கூல் சுரேஷ், பாக்யராஜ் சார் ஒரு சினிமாக்காரன். அவருக்கு சினிமா ஸ்டைலில்தான் அஞ்சலி செலுத்தினேன். அதுமட்டுமில்லாமல், பாக்யராஜ் சாரின் சினிமா வரலாற்றிலேயே மிக முக்கிய அடையாளமே முருங்கைக்காய்தான் அதனால்தான் அவரது அடையாளத்தை மதித்து, அந்த முருங்கைக்காய் கட்டுகளைக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினேன். ஆனால், உள்நோக்கம் தெரியாமல் பலரும் என்னைச் சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சிக்கிறார்கள். அப்படி என்னைத் தப்பாகப் பேசுபவர்களை, மறைந்த பாக்யராஜ் சார் மேலே இருந்து தண்டிப்பார். இதேபோல்தான் லாரன்ஸ் மாஸ்டரையும் நெட்டிசன்கள் சும்மா விடாமல் விமர்சனம் செய்தீர்கள். அவர் ஏழை எளிய மக்கள் பலருக்குப் பலவிதமான உதவிகளைச் செய்து வருகிறார். ஆனால், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஏதோ ஒரு உதாரணத்திற்காக நாய் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால், அத்தனை உதவிகளைச் செய்த அவரையே மக்கள் வேறு மாதிரி தப்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்று விரக்தியுடன் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X