STR-க்காக குரல் கொடுப்பேன்... பத்து தல விழாவில் என்னை பேசவிடவில்லை... கூல் சுரேஷ் குமுறல்!

சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில், சிம்பு, அவரது தந்தை டிஆர், ஏஆர் ரஹ்மான், இயக்குநர் கிருஷ்ணா, ப்ரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது பத்து தல இசை வெளியீட்டு விழா மேடையில் தன்னை பேசவிடவில்லை என கூல் சுரேஷ் எமோஷனலாக தெரிவித்துள்ளார்.

பத்து தல இசை வெளியீடு

பத்து தல இசை வெளியீடு

சிம்புவின் பத்து தல படத்தின் ஆடியோ லான்ச், இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சிம்பு, ஏஆர் ரஹ்மான், டிஆர், ப்ரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் நடந்த இதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின.

கொந்தளித்த கூல் சுரேஷ்

கொந்தளித்த கூல் சுரேஷ்

சிம்புவின் ஆரம்பகால படங்களில் அவரது நண்பராக நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். சிம்புவால் திரையுலகில் அறிமுகமான கூல் சுரேஷ், பல வருடங்களாகவும் அவரது விஸ்வாசியாகவே வலம் வருகிறார். நடுவில் அட்ரஸ் இல்லாமல் இருந்த கூல் சுரேஷ், தற்போது சில மாதங்களாக மீண்டும் அட்ராசிட்டி செய்துவருகிறார். குறிப்பாக வெந்து தணிந்தது காடு படத்திற்கு வாண்டடாக ப்ரோமோஷன் செய்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் இருந்து ஐபோன் ஒன்றையும் பரிசாக பெற்றார். இந்நிலையில், நேற்றைய பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் எமோஷனலாக கொந்தளித்துவிட்டார்.

என்னை பேசவிடவே இல்லை

என்னை பேசவிடவே இல்லை

பத்து தல படத்தில் கூல் சுரேஷும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவரை மேடையில் பேசவிடவில்லை என தெரிகிறது. இதுகுறித்து விழா முடிந்ததும் பேட்டிக்கொடுத்த கூல் சுரேஷ், ரொம்பவே ஆதங்கத்துடன் பேசினார். அதில், "நாலு வார்த்தை அங்க தான் பேசிருக்கணும். உயிர கொடுத்து ஒருத்தன் கத்திட்டு இருக்கும் போது, விழா மேடையில் தான் நான் பேசியிருக்க வேண்டும்" என தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

சிம்புவுக்காக குரல் கொடுப்பேன்

சிம்புவுக்காக குரல் கொடுப்பேன்

தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ், "STR-ன் பத்து தல, சிம்புன்னா கெத்து தல" என ரைம்மிங்காக பேசி ரசிகர்களை அலறவிட்டார். மேலும், "என்னை கறுவேப்பில்லையாக தான் எல்லாரும் பயன்படுத்துகிறார்கள், மேடையில் என்னை ஏற்றவில்லை என உலகமே கேட்கிறது. எப்படியிருந்தாலும் நான் STR-க்காக குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன். இன்றைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. வரும் 30ம் தேதியில் திரையரங்குகளில் சந்திப்போம்" எனக் கூறினார்.

ஹெலிஹாப்டர் பெர்மிஷன் கிடைக்கல

ஹெலிஹாப்டர் பெர்மிஷன் கிடைக்கல

அதேபோல், "இந்த வாழ்க்கை எனக்கு சிம்பு கொடுத்தது தான்" என்றார். பத்து தல படத்தின் FDFS பார்க்க ஹெலிஹாப்டரில் வருவது குறித்து ரசிகர்கள் கேட்டனர். அதற்கும் பதிலளித்த கூல் சுரேஷ், "ஹெலிஹாப்டர் சென்னையில் வாடகைக்கு கிடைக்கவில்லை, பெங்களூருவில் இருந்து தான் கொண்டுவர வேண்டும். அதற்கு இன்னும் பெர்மிஷனும் கிடைக்கவில்லை. பெர்மிஷன் கிடைத்துவிட்டால் வீட்டை விற்றாவது ஐந்தரை லட்சம் செலவு செய்து ஹெலிஹாப்டரில் வருவேன்" எனக் கூறிச் சென்றார்.

மிரட்டும் பத்து தல ட்ரெய்லர்

மிரட்டும் பத்து தல ட்ரெய்லர்

இதனிடையே நேற்று வெளியான பத்து தல ட்ரெய்லர், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் ஹிட்டான 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது பத்து தல. சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள பத்து தல படத்தில் சிம்புவுடன் ப்ரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X