2026 சட்டமன்ற தேர்தல்.. என் கட்சி.. விஜய் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடும்.. கூல் சுரேஷ் பேட்டி!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் என் சிஎஸ்கே கட்சி, தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைத்து பேட்டியிடும் என்று நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். மேலும், சாதாரணமான நடிகன் எனக்கே இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் போது அவருக்கு எதிர்ப்பு வந்து கொண்டு தான் இருக்கும் என்றார்.
நடிகர் கூல் சுரேஷ்: நடிகர் விமல் நடித்த, போகும் இடம் வெகு தூரம் இல்லை திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இப்படத்தை பார்த்த கூல் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விஜய் கட்சி கொடி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அது யானையாக இருந்தாலும் சரி, பூனையாக இருந்தாலும், தமிழ்நாட்டிலும் அது யானை தான், ஆப்ரிக்காவில் சென்றாலும் அதன் பெயர் யானை தான். ஓட்டுப்போடும் இடத்தில் யானை சிவப்பா இருக்கா, கருப்பா இருக்கா, வெள்ளையா இருக்கா என்று யாரும் பார்க்க மாட்டார்கள், அந்த இடத்தில் யானை இருந்தா போதும் ஓட்டுப்போடுவோம்.

இந்த கொடி வெளியீடு மூலமாக யானை தான் என் சின்னம் என்பதை கொண்டு வருகிறார். யானையை விடுங்கள், அவர் கொடியில் பாம்பு, மயில் என எதை வைத்து இருந்தாலும், அதற்கும் ஒரு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இப்படி அவர் எதை வைத்தாலும் அதற்கு எதிர்ப்பு வந்து கொண்டுதான் இருக்கும்.
விஜய் கட்சியுடன் கூட்டணி: தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு யார் யார் எல்லாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நினைக்கிறார்களோ அவர்களோடு கூல் சுரேஷின் சிஎஸ்கே கூட்டணியில் இருக்கும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. என்னுடைய சின்னம் கழுதை, அந்த சின்னத்தை நான் வைத்திருப்பதற்கு காரணம், மக்களின் சுமைகளை நான் கழுதைபோல சுமப்பேன் என்பதற்கான இந்த சின்னத்தை தேர்ந்து எடுத்தேன். அது மட்டுமில்லாமல் அனைவரின் வீட்டின் முன் கழுதை போட்டோ இருக்கும், என்னைப்பார் யோகம் வரும் என்பார்கள்.
என் ஆதரவு விஜய்க்கு: இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் கூல் சுரேஷின் சிஎஸ்கே கட்சி, தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைத்து பேட்டியிடும். ஒரு வேளை என் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று யாராவது எதிர்ப்பு தெரிவித்தாலும், விஜய் சார் கூட என்னை வேண்டாம் என்று சொன்னாலும், என்னுடைய ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடுத்துக்கொண்ட தான் இருப்பேன் என்றார்.
எனக்கே எதிர்ப்பு: நான் சாதாரண சப்பைப் பையன், நான் இங்கே பேசிக்கொண்டு இருக்கும் போது, பின்னாடி இருப்பவர்கள் போதும் நிறுத்து, பேசாதே என்று பேசுகிறார்கள். எனக்கே இவ்வளவு விமர்சனம் வரும் போது விஜய்க்கு விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கு, அந்த கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, தமிழக வெற்றிக்கழகம் போகும் இடம் வெகு தூரம் இல்லை என்று அந்த பேட்டியில் கூல் சுரேஷ் பேசி உள்ளார்.
போகுமிடம் வெகு தூரமில்லை: விமல் ஹீரோவாக நடித்துள்ள படம், போகுமிடம் வெகு தூரமில்லை படத்தில் நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குநர், மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார். இப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது.


Click it and Unblock the Notifications











