எக்ஸ்ட்ரா 10 ரூபாய்னு வீடியோ போடுறீங்களே.. எந்த கொம்பானலும் ஆட்சியை கவுக்க முடியாது.. கூல் சுரேஷ்

சென்னை: வித்தியாசமான ப்ரோமோஷன் ஸ்டைலால் பேசுபொருளாக இருக்கும் கூல் சுரேஷ், தற்போது 'இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சிலர் பார்ட்டி' பட விழாவில் காவல்துறை அதிகாரி உடையில் வந்து தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் மது ஒழிப்பு குறித்து பேசினார்.

கூல் சுரேஷ் பேச்சு: 'இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சிலர் பார்ட்டி' படத்தைப் பார்த்த பிறகு தமிழ்நாட்டில் இனிமேல் யாருமே குடிக்க மாட்டார்கள். அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் பாபு மட்டும் கிடையாது. நம்ம மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் சார் தான். இன்றைக்குத் தமிழ்நாட்டை ஒரு போதை இல்லாத மாநிலமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் விஜய். அவர்களின் ஆட்சியை எப்படியாவது குறை சொல்ல வேண்டும், அவரது ஆட்சியை எப்படியாவது கவுக்க வேண்டும் என்பதற்காகவே கையில் ஒரு செல்போனை எடுத்துக் கொண்டு ஒயின் ஷாப் வாசலுக்குபோய், எதற்காக எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் வாங்குறீங்க? எக்ஸ்ட்ரா இருவது ரூபாய் வாங்குறீங்க?' என எல்லாவற்றையும் ட்விஸ்ட் செய்து வீடியோக்களைப் போட்டு விளம்பரம் தேடுகிறார்கள்.

CM Vijay Cool suresh

எந்த கொம்பனாலும் முடியாது: ஆனால், நான் இப்போது உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்... நீங்கள் தினமும் சாப்பிடுகிறீர்களே சோறு, அந்தச் சோறு வேவதற்கு அடுப்பு எரிய வேண்டும். அந்த அடுப்பு எரிவதற்கு சிலிண்டர் தேவைப்படுகிறது. அந்த சிலிண்டரை நம் வீட்டிற்கு டெலிவரி செய்யக் கொண்டு வரும்போது, எக்ஸ்ட்ராவாக 50 ரூபாய் வாங்குகிறார்களே... அதைப்பற்றி இதுவரை யாராவது வாயைத் திறந்து ஒரு வீடியோ போட்டிருக்கிறீர்களா? ஒயின்ஷாப்பிற்குச் சென்று எக்ஸ்ட்ரா வாங்கும் பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் போய் சண்டை போட்டு, நீங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக மட்டுமே திட்டமிட்டு வீடியோ போடுகிறீர்களே... இந்தச் சிலிண்டர் பிரச்சனைக்கு ஏன் இதுவரை வீடியோ போடவில்லை? இந்த ஆட்சியை கலைந்துவிடலாம் என பலர் நினைக்கிறார்கள், எந்த கொம்பன் வந்தாலும் சரி, தமிழகத்தில் தவேக ஆட்சியை... நம்ம விஜய் சாரின் ஆட்சியை யாராலும் தடுக்கவே முடியாது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் இந்த இன்ஸ்பெக்டர் சூர்யா திரைப்படம் என்று கூல் சுரேஷ் அதிரடியாக பேசினார்.

Read more about: cm vijay cool suresh விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X