மேல கை போட்டது மட்டுமின்றி.. திடீர்னு கிஸ் அடித்த கூல் சுரேஷ்.. பதறிப்போன பிக் பாஸ் பிரபலம்!

சென்னை: சமீபத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி மீது சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் கை போட வந்ததும் நடிகைக்கு பிடிக்காமல் ஒதுங்கி சென்றதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதை விட சற்றே எல்லை மீறி நடிகர் கூல் சுரேஷ் பிக் பாஸ் பிரபலத்திடம் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்படங்கள் வெளியானாலே தியேட்டருக்கு சென்று அந்த படத்தை பற்றி புகழ் பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் கூல் சுரேஷ்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ரோமோஷன் செய்வது போல ஆரம்பித்து தற்போது அதையே பொழப்பாக ஓட்டி வருகிறார் கூல் சுரேஷ்.

ஷங்கர் மகளுக்கு லவ் லெட்டர்

ஷங்கர் மகளுக்கு லவ் லெட்டர்

நகைச்சுவை நடிகர் கூல் சுரெஷ் தொடர்ந்து தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகும் போது அட்டகாசம் செய்து வரும் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. விருமன் படம் ரிலீஸ் சமயத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரை காதலிப்பதாக லவ் லெட்டர் எழுதியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நான் கடவுள் இல்லை ரிலீஸ்

நான் கடவுள் இல்லை ரிலீஸ்

ஆனாலும், தொடர்ந்து புதிய படங்கள் வெளியானால், படம் சூப்பர், தாறுமாறு என பேசி தயாரிப்பு நிறுவனத்திடம் பணம் வாங்கி வருகிறார் கூல் சுரேஷ் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வாரம் வெளியான எஸ்.ஏ. சந்திரசேகரின் நான் கடவுள் இல்லை படத்தை பார்த்து விட்டு படம் சூப்பர் என பேசியிருந்தார். அப்போது பிக் பாஸ் பிரபலம் மற்றும் அந்த படத்தின் நாயகியான சாக்‌ஷி அகர்வால் உடன் கூல் சுரேஷ் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தோளின் மீது கை

தோளின் மீது கை

சமுத்திரகனி, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தை தியேட்டரில் பார்க்க கூல் சுரேஷ் வந்த நிலையில், படத்தை பார்க்க நடிகை சாக்‌ஷி அகர்வாலும் வந்திருந்தார். சாக்‌ஷி அகர்வால் அருகே இருந்த நிலையில், அவர் தோள் மீது கை வைத்து கூல் சுரேஷ் பேசியது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

திடீரென கிஸ்

திடீரென கிஸ்

கை போட்டது மட்டுமின்றி திடீரென நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு கூல் சுரேஷ் முத்தத்தையும் கொடுக்க அவரே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிவிட்டார். ஆனால், எந்த பிரச்சனையும் செய்யாமல் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்ற வீடியோக்கள் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. கூல் சுரேஷின் செயலை ரசிகர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X