Cool Suresh - பிரதீப் விஷயத்தை வேறு மாதிரி கொண்டுபோய்விட்டார்கள்.. மனம் திறந்த பிக்பாஸ் கூல் சுரேஷ்

சென்னை: Cool Suresh(கூல் சுரேஷ்) பிக்பாஸிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட கூல் சுரேஷ் பிரதீப் ஆண்டனி விஷயம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்து தற்போது ஏழாவது சீசன் நடந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹைலைட்டாக கருதப்படுவது கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதுதான். அதனால்தான் அவரை விடாமல் நிகழ்ச்சி குழு தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. வாரா வாரம் சனி, ஞாயிறு கிழமைகளில் போட்டியாளர்களிடம் கமல் பேசுவார். அந்த நாட்களில் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறுவது குறிப்பிடத்தக்கது.

Cool Suresh Talks about Pradeep Antony in Latest Interview After Bigg Boss 7 Eviction

சர்ச்சை கமல்: இதுவரை அவர் தொகுத்து வழங்கிய சீசன்களிலேயே இந்த சீசனில்தான் அவரது பெயர் டேமேஜ் ஆக தொடங்கியிருக்கிறது. அதற்கு முதல் விதை போட்டது பிரதீப் ஆண்டனி விவகாரம். அதாவது அவர் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காரணம் காட்டி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது கடும் கண்டனத்தை பெற்றது. ஏனெனில் பிரதீப்பைவிட மோசமாக நடந்துகொள்ளும் நிக்சன், மாயா, பூர்ணிமா ஆகியோர் இன்னும் வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள்.

நிக்சன்: அதேபோல் கடந்த வாரம்கூட நிக்சன் அர்ச்சனாவை பார்த்து சொருகிடுவேன் என்று கூறினார். பூர்ணிமாவும் ஓபனாகவே கெட்ட வார்த்தை பேசினார். பல நாட்களாகவே 18 + ஜோக்குகளையும் அடித்தார். நிக்சன் அர்ச்சனாவிடம் அப்படி பேசியதை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக நிக்சனுக்கு கடும் தண்டனையை கமல் ஹாசன் கொடுப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் பேசிவிட்டு ஒரு ஸ்ட்ரைக் கார்டை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.

கூல் சுரேஷ் எவிக்ட்: சூழல் இப்படி கமல் ஹாசன் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றனர். மேலும் அவர் அடுத்த சீசனிலிருந்து விலகிவிடுவார் என்றும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் கூல் சுரேஷ் கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார். வீட்டுக்குள் அவர் இருந்த வரை கலகலப்பாக இருந்தார். ஒருகட்டத்தில் அவர் பிக்பாஸ் வீட்டு சுவர் ஏறி வெளியே வர முயன்றார். இதனையடுத்து அவர் வாக்குகளின் அடிப்படையிலும், அவருக்கு விருப்பம் இல்லாததாலும் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கூல் பேட்டி: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கூல் சுரேஷ் முதல் ஆளாக சந்தானத்தை சென்று பார்த்தார். அதனையடுத்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் பிரதீப் ஆண்டனி விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் ஆண்டனி இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்தான் டைட்டில் வின்னர் ஆகியிருப்பார்.

மூன்று பேர்தான் உண்மை: அவரது விஷயத்தை வேறு மாதிரி கொண்டுபோய்விட்டார்கள். அதை நான் எதிர்பார்க்கவில்லை. எனது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. பிரதீப் ஆண்டனி டைட்டில் வின்னர் ஆகியிருப்பது நடக்காமல் போய்விட்டது. எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அத வீட்டுக்குள் உள்ளே மூன்று பேர் மட்டும்தான் உண்மையாக இருக்கிறார்கள். விஷ்ணு, மணி, தினேஷ் ஆகியவர்கள்தான் அவர்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X