“சிம்புவுக்கு விரைவில் திருமணம்.. பொண்ணு யாருனு எனக்குத் தெரியும்” பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்
சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிம்புவுக்கு பார்த்திருக்கும் பெண் யார் என்பது தனக்கு தெரியும் என நடிகர் கூல் சுரேஷ் கூறினார்.
இயக்குனர் குழந்தை ஏசு தயாரித்து இயக்கியுள்ள படம் அந்த நிமிடம். ருத்ரா, நௌஷின் கான், சஞ்சனா நாயுடு, வீரேந்தர் சிங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார் நடிகர் கூல் சுரேஷ்.
அப்போது அவர், "சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவருக்கு பார்த்துள்ள மணப்பெண் யார்? எப்போது கல்யாணம் என்று எனக்குத் தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று தெரிவித்தார்.

சிம்புவுடன் பல்வேறு படங்களில் நடித்தவரான இவர், டி.ஆர் நடத்தி வரும் கட்சியில் முக்கிய பொறுப்பில், குடும்ப நண்பராகவும் இருந்து வருகிறார். இதனால் இவரது சிம்பு திருமணம் பற்றிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் சகோதரருமான குறளரசனின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்குப் பின்னர் சிம்புவுக்கு எப்போது என்ற கேள்வி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











