வெந்து தணிந்தது காடு.. பார்ட் 2வுக்கு வணக்கத்த போடு.. மெய்மறந்து சிம்புவை ரசித்த கூல் சுரேஷ்!

சென்னை: நடிகர் சிம்பு ரசிகர்களுடன் தியேட்டரில் வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்கப் போவதில்லை என்ற நேற்றய ட்விட்டர் ஸ்பேஸிலேயே தெரிவித்து இருந்தார்.

அதனால், ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் அவரது ரசிகரும் நடிகருமான கூல் சுரேஷ் இந்த படத்தைப் பற்றி என்ன சொல்லப் போகிறார் என்பதில் தான்.

ஏனென்றால் வெந்து தணிந்தது காடு படத்தை ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் புரமோட் செய்திருந்த பெருமை கூல் சுரேஷையே சேரும்..

நன்றி சொன்ன சிம்பு

நன்றி சொன்ன சிம்பு

ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடிய சிம்புவிடம் கூல் சுரேஷ் பற்றி ரசிகர் ஒருவர் கேட்க, வெந்து தணிந்தது காடு படத்தை பெரியளவில் நண்பர் கூல் சுரேஷ் புரமோட் செய்து வருகிறார், அவருக்கு என் மனமார்ந்த நன்றி எனக் கூறினார். இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே தியேட்டரில் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரசிகராக உட்கார்ந்து பார்த்தார் கூல் சுரேஷ்.

ஆர்ப்பாட்டமே இல்லை

ஆர்ப்பாட்டமே இல்லை

மற்ற படங்களுக்கு பெரும் ஆர்ப்பாட்டமாக வெளியே வந்து பேட்டி கொடுத்து வந்த கூல் சுரேஷ் இந்த முறை வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்து விட்டு ரொம்பவே அமைதியாக இருந்தார். அவரிடம் ரசிகர்கள் ஏன் இப்படி டல்லா இருக்கீங்க, 3 மணி நேரம் லெந்த் என்பதால் தூங்கிட்டீங்களா என்பது போல கேட்க, இது STRன்னு கத்துற படம் இல்லை, STRன்னு மைல்டா அவரது நடிப்பை ரசிக்கிற படம்னு ரொம்பவே ஃபீல் பண்ணி பேசிய வீடியோ யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

பார்ட் 2வுக்கு வணக்கத்த போடு

பார்ட் 2வுக்கு வணக்கத்த போடு

வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என பேசி சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானவர் கூல் சுரேஷ். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து விட்டு என்ன சொல்ல விரும்புறீங்க என்கிற கேள்வியை முன் வைத்ததும், வெந்து தணிந்தது காடு பார்ட் 2வுக்கு வணக்கத்த போடு என பேசியுள்ளார். படம் நல்லா போச்சுன்னா பார்ட் 2 வரும் என ஏற்கனவே கெளதம் மேனன் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புது சிம்பு

புது சிம்பு

இதுவரை பார்த்திராத புதிய சிம்புவை இந்த படத்தில் பார்க்கலாம். இதுக்காகத்தான் மனுஷன் அப்படி வெயிட்டை குறைத்து நடித்தார் என்பதை நினைக்கவே ரொம்ப பெருமையா இருக்குன்னு கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு படத்தையும் அதில் வித்தியாசமாக நடித்துள்ள சிம்புவையும் பாராட்டி பேசியுள்ளார்.

சிம்புவுக்கு எப்போ திருமணம்

சிம்புவுக்கு எப்போ திருமணம்

நடிகர் சிம்புவுக்கு எப்போ திருமணம் என்கிற கேள்வியை கூல் சுரேஷிடம் முன் வைக்க, விரைவில் திருமணம் செய்து கொள்வார், அது தொடர்பான அறிவிப்பை சிம்புவே வெளியிடுவார். ஆனால், அதுபற்றி எல்லாம் அவரிடம் நான் பேசுவதே கிடையாது என பதில் அளித்துள்ளார். கூல் சுரேஷின் பேட்டியை எடுக்க ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் அவரை தியேட்டர் வாசலில் மொய்த்து விட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X