உங்களை மாதிரி நான் இல்லை.. ரொம்ப தப்பு ப்ரோ.. விஜய்யை கலாய்த்த கூல் சுரேஷ்..தளபதிக்கு இந்த நிலைமையா?
சென்னை: தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ். அவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிடவும் பட விழாக்களில் கலந்துகொண்டு பேசி ஃபேமஸ் ஆனவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட அவருக்கு வரவேற்பு கிடைத்தது. மேலும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்தார். முக்கியமாக சரக்கு பட நிகழ்ச்சியில் தொகுப்பாளினிக்கு அத்துமீறி மாலை போட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் விஜய்யை அவர் கலாய்த்து பேசியிருக்கிறார்.
நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் கூல் சுரேஷ். வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து சிம்புவின் படங்களுக்கு தீவிரமாக ப்ரோமோஷன் செய்துவருபவர். அவரது பேச்சு ரசிக்கும்படியாக இருந்தாலும் சில சமயங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகக்கூடியவை. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் சிம்புவின் படங்களுக்கு ப்ரோமோஷன் செய்வதையே தனது மூச்சாக கொண்டிருந்தார். அதனையடுத்து வெளியாகக்கூடிய எல்லா படங்களுக்கும் புரோமோஷனில் ஈடுபடுகிறார்.

சரக்கு நிகழ்ச்சியில் கூல் சுரேஷ்: இந்த சூழலில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்திருக்கும் சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'இங்கு எல்லோருக்கும் மாலை போட்டாங்க. ஆனால் ஒருத்தவங்களை மறந்துட்டாங்க. நம்மை வரவேற்பதற்காக விதவிதமான வார்த்தைகளை கண்டுபிடித்து பேசிய தொகுப்பாளினிக்கு யாராச்சும் மாலை போட்டீங்களா' என கேட்டு அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டார்.
மன்னிப்பு கேட்ட மன்சூர்: கூல் சுரேஷின் இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரைத் தொடர்ந்து பேச வந்த மன்சூர் அலிகானிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப; சுரேஷ் செய்தது தப்புதான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.அதேபோல் கூல் சுரேஷும், அந்தப் பெண்ணும் நானும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே பேசினோம் என கூற அதற்கு அந்தப் பெண்ணோ நான் ஒருவார்த்தைக்கூட உங்களிடம் பேசவில்லையே என சொல்ல கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார்.
கூல் சுரேஷின் மன்னிப்பு: இதனைத் தொடர்ந்து கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டும், நடந்த சம்பவம் குறித்தும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய அவர், "சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதம் நடந்துவிட்டது. அந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டேன். ஆனால் பெண்ணுக்கு மாலை போடக்கூடாதாம். கலகலப்பாக இருக்க வேண்டும் என்றுதான் செயல்படுவேன். அப்படித்தான் அப்போதும் விளையாட்டுத்தனமாக செய்தேன்.விபரீதமாகிவிட்டது" என்று கூறினார். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார் அவர்.

விஜய்யை கலாய்த்த சுரேஷ்: இந்நிலையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் நிலையில் அவரை கலாய்த்திருக்கிறார் சுரேஷ். ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், "என்கூட இருப்பவர்கள் எல்லாம் அல்லாகூட இருப்பவர்கள்தான் என்று புரிகிறதா. ஆனால் நான் குல்லா போடும் ஆள் இல்லை. வாட் ப்ரோ.. திஸ் இஸ் வெரி ராங் ப்ரோ. குவார்ட்டர்,கோழி பிரியாணி கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பவன் இல்லை இந்த கூல் சுரேஷ். நான் காட்சி ஆரம்பித்திருக்கிறேன். தனித்துதான் நிற்கப்போகிறேன். பல கோடி செலவு செய்து மாநாடு நடத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்அடுத்தி, பள்ளிக்கூடம், மருத்துவமனை, வேலைகளுக்கு செல்பவர்களை தொந்தரவு செய்வதற்காக நான் கட்சியை ஆரம்பிக்கவில்லை" என்றார்


Click it and Unblock the Notifications











