Cool Suresh - சரக்கு விழா.. தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷ்.. மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்
சென்னை: Cool Suresh (கூல் சுரேஷ்) மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்திருக்கும் சரக்கு பட இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அத்துமீறியது கடும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது.
மன்சூர் அலிகான் 90களில் பிரபல வில்லனாக வலம் வந்தவர். முதல் படத்திலேயே வீரப்பன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பில் அதகளம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தனது வில்லத்தனமான நடிப்பால் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருந்தாலும் தனது வெளிப்படையான பேச்சு மற்றும் பேட்டியின்போது அவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தார்.

லோகேஷ் கனகராஜ் மன்சூர் ரசிகர்: தற்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகானுக்கு ரசிகர். தன்னுடைய கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் அவர் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்ரம் படத்திலும் மன்சூர் அலிகான் நடனம் ஆடியிருந்த பாடலையும் இடம்பெற செய்திருந்தார்.
லியோவில் மன்சூர்: தொடர்ந்து மன்சூர் அலிகானை பற்றி மேடையில் பேசிவந்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தில் மன்சூருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்தில் மன்சூருக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரைத்தான் அவர் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லியோ கேங்ஸ்டர் கதை என்பதால் விஜய்யின் கேங்கில் மன்சூர் முக்கியமான ஆளாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.
சரக்கு: இந்தச் சூழலில் மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ஜெயக்குமார் ஜே இயக்கியிருக்கிறார். வலினா பிரின்ஸ் என்பவர் ஹீரோயினாக நடிக்க பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்தும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் மன்சூர் அலிகான் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அத்துமீறிய கூல் சுரேஷ்: விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பேசினார். அவருக்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. அப்போது கூல் சுரேஷ் எல்லோருக்கும் மாலை போடுகிறோமே நம்மை வித்தியாசமான வார்த்தைகளால் வரவேற்கும் ஒருவருக்கு போடுகிறோமா என்று கேட்டு அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு திடீரென்று மாலையை போட்டுவிட்டார். இதனால் அந்த தொகுப்பாளினி கடுமையாக கோபமடைந்தார். மேலும் அந்த தொகுப்பாளினியிடம் என்னங்க கோபமாகிட்டீங்களா என கேட்க அந்த தொகுப்பாளினி கூல் சுரேஷை முறைத்துவிட்டு பேசுங்க என்று சொன்னார்.
மன்னிப்பு கேட்ட மன்சூர்: இந்த சம்பவத்துக்கு பிறகு பேச வந்த மன்சூர் அலிகானிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், 'கூல் சுரேஷ் இப்படி செய்திருக்கக்கூடாது. அவர் செய்தது எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவர் சார்பாக' மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ், 'நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து நானும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தோம் என சொல்ல; அந்த தொகுப்பாளினியோ நான் உங்களிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லையே என பல்பு கொடுத்தார்.
உடனடியாக கூல் சுரேஷ், மன்னித்துக்கொள் தங்கச்சி என்று கூறினார். கூல் சுரேஷின் இந்த செயல் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. மேலும் இவர் போன்ற ஆட்களை இனி எந்த சினிமா நிகழ்ச்சிக்கும் அழைக்கக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











