Nagarjuna: கூலி வில்லனிடம் 14 முறை அறை வாங்கிய நடிகை.. படப்பிடிப்புத் தளத்தில் நடந்தது என்ன?

சென்னை: நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். கூலி படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான புரோமோசன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகர்ஜுனா குறித்து மிகவும் பரபரப்பான தகவலை பாலிவுட் நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.

கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 வது ஆண்டில் வெளியாகவுள்ளதால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா, நாகர்ஜுனா, அமீர் கான் என பலரும் படத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் புரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கூலி படத்தின் படப்பிடிப்பின் போதே, நாகர்ஜுனாவின் காட்சிகள் வெளியாகி வேகமாக பரவியது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இது ஒரு புறம் இருக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிகவும் ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனமும், லீக் செய்யப்பட்ட படப்பிடிப்பு தள காட்சிகள் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Coolie Actor Nagarjuna Akkineni slapped 14 Times To Actress Isha Koppikar She literally had marks on Her face
Photo Credit:

நாகர்ஜுனா: படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது. வரும் சனிக்கிழமை படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளார்கள். இப்படியான நிலையில் பாலிவுட் நடிகை இஷா கோபிகர் தான் நடிகர் நாகர்ஜுனாவுடன் இணைந்து பணியாற்றிய போது, அவர் தன்னை 14 முறை அறைந்தார் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

14 அறை: அதாவது அந்த பேட்டியில் நடிகை இஷா கோபிகர் கூறுகையில், " இயக்குநர் கிருஷ்ணா வம்சி இயக்கிய சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் நாகர்ஜுனாவால் தான் 14 முறை அறையப்பட்டேன். ஒரு காட்சியில் நாகர்ஜுனா என்னை அறைய வேண்டும், இயக்குநர் கிருஷ்ணா வம்சியோ அந்த காட்சியை மிகவும் தத்ரூபமாக எடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார். இதனால் நான், 14 முறை அறையப்பட்டேன். அப்போது நாகர்ஜுனாவின் கைகளின் தாரைகள் எனது கன்னத்தில் பதிந்தேவிட்டது" எனக் கூறியுள்ளார்.

Coolie Actor Nagarjuna Akkineni slapped 14 Times To Actress Isha Koppikar She literally had marks on Her face
Photo Credit:

பாவம்: நடிகை இஷா கோபியரின் இந்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சந்திரலேகா படத்தின் மூலம் தெலுங்கு சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நடிகை இஷா கோபியர் தற்போது பாலிவுட்டில் நன்கு அறியப்பட்ட நடிகையாக உள்ளார். இவரது இந்த பேட்டியை பார்த்த பல ரசிகர்களும் இணையவாசிகளும், இஷா கோபியர் உண்மையிலேயே பாவம். நாகர்ஜுனா இப்போதே இவ்வளவு உடல் வலிமையுடன் இருக்கிறார் என்றால், சந்திரலேகா படத்தின் படப்பிடிப்பின் போது எவ்வளவு உடல் வலிமையுடன் இருந்திருப்பார். அப்படியானால் இஷா கோபியருக்கு ஒவ்வொரு அடியும் எப்படி விழுந்திருக்கும் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X