Coolie: குடும்பத்துடன் தலைவர் தரிசனம்.. சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த கூலி பட நடிகர் சௌபின் சாஹிர்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கி வருகின்றார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் படத்திற்கு சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்குகின்றனர். இந்நிலையில் படத்தில் மற்றவர்கள் யார் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பை படக்குழு இன்று முதல் ஒவ்வொரு அப்டேட்டாக கொடுத்து வருகின்றனர். அதில் முதல் அப்டேட்டாக மலையாள நடிகர் சௌபின் சாஹிர் கூலி படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இணையத்தில் நடிகர் சௌபின் சாஹிர் தனது குடும்பத்தினருடன் சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த புகைப்படம் உலா வருகின்றது.
சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணி இணைந்து ஜெயிலர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கின்றார். கூலி படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதுமே பலரது மனதில் தோன்றியது, படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதுதான்.

மேலும் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இந்தப் படம் இடம் பெறுமா என்ற கேள்வி பலரது மனதில் ஓடிக்கொண்டுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் கார்த்தி நடிப்பில் கைதி, கமல்ஹாசன் மற்றும் சூர்யா நடிப்பில் விக்ரம் மற்றும் விஜய் நடிப்பில் லியோ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படம் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்த நிலையில், படம் குறித்த அப்டேட்கள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

தயாள்: படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டில், மலையாள சினிமாக்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் நடிகரான சௌபின் சாஹிர் கூலி படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என படக்குழு தெரிவித்துள்ளது. கும்பலாங்கி நைட்ஸ், மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற மலையாளப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தினைப் பெற்றுள்ள சௌபின் சாஹிர் கூலி படத்தில் நடிக்கின்றார் என்ற அறிவிப்பு பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தலைவர் தரிசனம்: இந்நிலையில் மலையாள நடிகரும் இயக்குநருமான சௌபின் சாஹிர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை படப்பிடிப்புத் தளத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சௌபின் சாஹிர், அவரது மனைவி ஜாமியா சாஹிர் மற்றும் அவர்களது குழந்தை ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











