ரஜினிகாந்த் சாருக்கு பின்னாடி நிக்கிற சீன் என்றால் கூட ஓகே.. கதையெல்லாம் வேண்டாம்.. உபேந்திரா ஓபன்!
சென்னை: கடந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய படமாக ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது.
இந்த ஆண்டு ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள வேட்டையின் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகி கோட் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் இணைந்துள்ள கன்னட நடிகர் உபேந்திரா அந்த படத்தில் தான் எப்படி கமிட் ஆனேன் என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் கூலி: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷராப் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேபோல அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
கன்னட நடிகர் உபேந்திரா: நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடித்து வருகிறார். கன்னடத்து ரயில் உலகின் முன்னணி நடிகரான உபேந்திரா இந்தப் படத்தில் நடித்து வருவது கர்நாடகாவில் வசூலில் கூலி மிகப்பெரிய கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதையெல்லாம் வேண்டாம்: சென்னையில் என்னுடைய படத்தின் இறுதிகட்ட பணிகளுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது லோகேஷ் கனகராஜ் என்னை வந்து சந்திக்கப் போவதாக மெசேஜ் வந்தது. உடனடியாக அவரை சந்தித்தேன். லோகேஷ் கனகராஜ் வந்து கூலி படத்தின் கதை பற்றியும் என்னுடைய போர்ஷன் பற்றியும் கூற ஆரம்பித்தார். நான் உடனடியாக அதெல்லாம் வேண்டாம். அவர் யாரு தெரியுமா? சூப்பர் ஸ்டார்! அவர் பின்னாடி நிக்கிற சீனாக இருந்தாலும் நடிக்கிறேன். ரஜினிகாந்த் படத்தை வேண்டாம் என்று எந்த நடிகர் சொல்வார் என்று கூறினேன். இப்படித்தான் அந்த படத்தில் இணைந்தேன் எனக் கூறியுள்ளார்.
கோட் வசூலை வேட்டையன் முந்துமா?: இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே கோட் திரைப்படம் தான் 350 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டியுள்ளது. இந்த வார இறுதிக்குள் 400 கோடி வசூலை கோட் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மேல் தியேட்டரில் கோட் வசூல் செய்யுமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர். இந்நிலையில், வரும் அக்டோபர் 10ம் தேதி சோலோ ரிலீஸாக வெளியாகும் வேட்டையன் திரைப்படம் கோட் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி வசூல்: வேட்டையன் திரைப்படம் கூட 1000 கோடி வசூலை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வராது என்கின்றனர். ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கூலி திரைப்படம் கண்டிப்பாக அந்த சாதனையை படைக்கும் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











