ஜெயிலர் அளவுக்கு கூலி ஆல்பம் வொர்த்தா?.. அனிருத்துக்கு இருக்கும் அதிக பிரஷர்.. 3வது சிங்கிள் எப்படி?
சென்னை: சிக்கிடு வைப், கூலி பவர் ஹவுஸ் க்ளிம்ப்ஸ் எல்லாம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு அதன் முழு பாடல்கள் வெளியான பின்னர், பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்கிற ட்ரோல்கள் தான் சோஷியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கின்றன. நேற்று காலை முதலே சன் பிக்சர்ஸ் பில்டப் கொடுத்து வந்த நிலையில், சொன்ன டைமில் 3வது சிங்கிளான கூலி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகவில்லை. ஆனால், ஒருவழியாக இரவு நேரத்தில் பாடலை வெளியிட்டு ரசிகர்களை அமைதியாக்கிவிட்டனர்.
அனிருத்தின் இசைக்கச்சேரிக்காகவே கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் நடைபெறாமல் அடுத்த மாதத்துக்கு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் அனிருத்தின் இசைக்கச்சேரியே தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகவுள்ள கிங்டம் படத்திற்காக கடைசி நேரம் வரை அனிருத் உழைத்து வருவதாகவும், சன் பிக்சர்ஸ் கூலி படத்தின் இசை பணியை சீக்கிரம் முடித்துக் கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தான் அனிருத் தனது இசைக்கச்சேரியையே ஒத்தி வைத்திருக்கிறார் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
ஜெயிலர் மிரட்டலான ஆல்பம்: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் அனிருத் போட்ட அத்தனை பாடல்களும் வேறலெவலில் ஹிட் அடித்தன. தமன்னாவின் காவாலா பாடலுக்கு பாலிவுட் நடிகைகள் எல்லாம் ரீல்ஸ் போட்டு நடனமாடினர். ஹுகும் பாடலை வைத்து வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரிகளை அனிருத் இன்னமும் அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ரத்தமாரே பாடலும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த சூப்பரான பாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

கூலி ஆல்பம் எப்படி?: சிக்கிடு வைப் முதலில் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட ஸ்டெப்பே வேறலெவலில் டிரெண்டானது. ஆனால், அதன் முழுப்பாடலும் வெளியாகி டி. ராஜேந்தர் டான்ஸ் எல்லாம் போட்டாலும் கூட, ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. பூஜா ஹெக்டே சிகப்பு நிற கவர்ச்சி கவுன் அணிந்து ஆடிய மோனிகா பாடலில் ரஜினிகாந்த் இடம்பெறாதது தலைவர் ரசிகர்களை டென்ஷன் ஆக்கிவிட்டது. செளபின் சாஹீர் ரசிகர்கள் மட்டுமே அந்த பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கூலி பவர் ஹவுஸ் எப்படி?: ஹுகும் பாடல் அளவுக்கு கூலி படத்தின் பவர் ஹவுஸ் பாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ஒரு ஸ்பூன் கம்மியாகவே இந்த கூலி பவர் ஹவுஸ் மொத்த பாடலும் உள்ளது. அனிருத்துக்கு இருக்கும் பிரஷர் காரணமாகவே அவரால் ஜெயிலர் ஆல்பத்தை மிஞ்சிய பாடல்களை கொடுக்க முடியவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், படத்தோட பார்க்கும் போது அனைத்து பாடல்களும் பட்டாசாக இருக்கும் என்றே ரசிகர்கள் நம்புகின்றனர். இசை பற்றித் தனக்கு பெரிதாக தெரியாததால் அனிருத் வசமே விட்டு விட்டேன் என லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்த நிலையில், நிச்சயம் லோகேஷின் நம்பிக்கையை அவர் கெடுக்க மாட்டார் என்றே நம்புவோம். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் வெளியாகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி ஆடியோ லாஞ்ச் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











