Coolie: தலைவர் பேசறது இருக்கட்டும்.. கலாநிதி மாறன் என்ன பேசப்போறோ? இன்னைக்கு சம்பவம் இருக்கு!

சென்னை: படம் நன்றாக ஓடுதோ இல்லையோ, படம் குறித்த பேச்சுக்கள் திரைத்துறையைக் கடந்து பொதுமக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பேசப்படுகிறது என்பதையே படத்தின் வெற்றியாக கருதும் நிலைக்கு தமிழ் திரையுலகம் வந்துவிட்டது எனலாம். இப்படி இருக்கும் போது பல நடிகர்கள் இசை வெளியீட்டு விழாவில் தான் தங்களது ஆதங்கத்தைக் கொட்டிக் கொள்கிறார்கள் என்ற விமர்சனத்திற்கு எல்லாம் ஆளாகியுள்ளார்கள்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 7 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆவலாக உள்ள விஷயங்கள் என்னவென்றால் படக்குழுவினர் என்ன பேசப்போகிறார்கள் என்பதுதான். குறிப்பாக ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல் ரசிகர் என்று கூறியதற்காக என்ன பதில் தரப்போகிறார் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.

Coolie Audio Launch Fans Expecting Kalanithi Maran Speech After Rajinikanth Speech

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிரமான ரசிகர். தற்போது கூலி, அடுத்து ஜெயிலர் 2 என அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார். ஏற்கனவே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கலாநிதி மாறன் பேசுகையில், நடிகர் விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்து பேசியதாக கூறப்பட்டது. குறிப்பாக, நீ, வா, போ என ஒருமையில் எல்லாம் மேடையிலேயே பேசினார்.

குறிப்பாக இந்த வயசுலையும் இதே ரசிகர்கள் பலத்தோட, இதே அளவுக்கு உங்க படமும் பிசினஸ் பன்னுச்சுனா அப்போ சொல்லலாம் நீங்க சூப்பர் ஸ்டார்னு. தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அன்றும் இன்றும் என்றும் ரஜினிகாந்த் மட்டும் தான் ஒரே சூப்பர் ஸ்டார் என பேசினார். அவரது இந்த பேச்சு பலருக்கும் ஷாக் கொடுத்தது. விஜய்யை வைத்து ஏற்கனவே பீஸ்ட், சுறா உள்ளிட்ட பல படங்களை எடுத்துள்ளார். இப்படி இருக்கும்போது அவர் அவ்வாறு பேசியது பலருக்கும் அதிர்ச்சிதான்.

Coolie Audio Launch Fans Expecting Kalanithi Maran Speech After Rajinikanth Speech

இந்நிலையில் கூலி படத்தை ரூபாய் 1000 கோடி வசூல் குவித்த முதல் தமிழ்படமாக மாற்ற பலவேறு வகைகளில் படத்திற்கு புரோமோசன் செய்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அப்படி இருக்கும்போது இன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசுவதும் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X