Coolie: நானே பெரிய கமல் ரசிகர் லோகேஷ்.. இவரு பெரிய ரசிகராம்ல.. ரஜினிகாந்த் நாளை பேசப்போவது இதுதான்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இசை வெளியீட்டு விழாவுக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் டிரைலர் எத்தனை மணிக்கு ரிலீஸ் என்பது குறித்து எதுவும் தகவல்கள் வெளியாகவில்லை.

இப்படி இருக்கும்போது ரசிகர்களுக்கு மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ள விஷயம் என்றால் அது கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என்பதுதான். அதுவும் இதற்கு முன்னர் அவர் பேசியது எல்லாம் இணையத்தில் இப்போதும் உள்ளன. இது மட்டும் இல்லாமல், அவரது பேச்சுகள் நடிகர் விஜய்யை அட்டாக் செய்துதான் உள்ளது என்று எல்லாம் பலரும் விமர்சித்தார்கள். குறிப்பாக அவர் சொல்லும் கதைகள் விஜய்யை அட்டாக் செய்துதான் இருக்கின்றன என்று பேச்சுகள் இணையத்தில் உலா வருவது வழக்கமானதாகவே மாறிப்போனது.

Coolie Audio Luanch Rajinikanth Ready To Give Epic Reply To Lokesh Kanagaraj for kamalhaasan Fan Boy Moment
Photo Credit:

அப்படியான நிலையில், இம்முறை ரஜினிகாந்த் என்ன பேசப்போகிறார் என்ற ஆவல் பலருக்கும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் குறித்து அவர் என்ன பேசப் போகிறார் என்பதுதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் என இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுதான். லோகேஷ் கனகராஜ் தீவிரமான கமல் ஹாசன் ரசிகர் என்பது ஊரறிந்த விஷயம், நாடறிந்த விஷயம். இப்படி இருக்கும்போது, கூலி படத்தின் கதையைச் சொல்வதற்காக லேகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தைச் சந்திக்கச் சென்றபோது, கதை சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்னர் ரஜினிகாந்திடம் கூறியது, " நான் பெரிய கமல் சார் ரசிகன்" என்று கூறிவிட்டுத்தான் கதையைச் சொல்லி உள்ளார்.

ஷாக் கொடுத்த ரஜினி: இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை எல்லாம் முடித்த பின்னர், லோகேஷ் கனகராஜின் உதவியாளர்களிடம் இந்த சம்பவத்தைச் நினைவு கூர்ந்த ரஜினிகாந்த், உங்களை நான் இசை வெளியீட்டு விழாவில் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியதாக லோகேஷ் கனகராஜ் கூலி புரோமோசன் பேட்டிகளில் கூறி வருகிறார். இப்படி இருக்கும்போது, பலருக்கும் லோகேஷ் கனகராஜ் குறித்து ரஜினிகாந்த் என்ன பேசப்போகிறார் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.

Coolie Audio Luanch Rajinikanth Ready To Give Epic Reply To Lokesh Kanagaraj for kamalhaasan Fan Boy Moment
Photo Credit:

ரஜினியின் பதில் இதுவா?: ஏற்கனவே கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தை திரையில் பார்த்த போது, கமல்ஹாசனைப் பார்த்து, யாருடா இந்த பையன் என தனது மனதில் தோன்றியதாகவும், அதன் பின்னர் வளர வளர கமல்ஹாசனின் படங்கள் தனக்குப் பிடித்துப் போனது எனவும் கூறியுள்ளார். மேலும் தானே பெரிய கமல்ஹாசன் ரசிகர் எனவும் பல இடங்களில் கூறியுள்ளார். இப்படி இருக்கும்போது ரஜினியிடம் போய் லோகேஷ் கனகராஜ் நான் பெரிய கமல் சார் ரசிகன் என்று கூறினால், உடனே ரஜினி மனதில், " முதலில் நானே பெரிய கமல் ரசிகர்டா.. அதுக்கு அப்புறம் தான் இதெல்லாம்.. இவரு பெரிய ரசிகராம்ல" என தோன்றியிருக்கும். இதைத்தான் நாளை இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X