கேஜிஎஃப் 2 சாதனையை முறியடித்த கூலி.. சூப்பர் ஸ்டார்னா சும்மாவா.. முதல் நாள் வசூல் 150 கோடி வருமா?
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பலர் பங்கேற்ற நிகழ்ச்சி நாளை சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் நேற்று கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நிலையில், தீயாக டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் அதிவேகமாக டிக்கெட்டுகள் விற்ற சாதனையில் கேஜிஎஃப் 2 படத்தின் சாதனையையே கூலி திரைப்படம் முறியடித்து இருப்பதாக கூறுகின்றனர்.

கேஜிஎஃப் 2, கூலி மற்றும் லியோ படங்களின் டிக்கெட் புக்கிங் குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
அரங்கம் அதிரப்போவது உறுதி: தியேட்டர் டிக்கெட் புக்கிங்கே வேறலெவலில் ரஜினிகாந்த் ரசிகர்களின் அலைமோதலில் தியேட்டர் டிக்கெட் கவுண்டர்கள் எல்லாம் அதிர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பெரியளவில் டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. கேரளாவில் கேட்டை திறந்ததும் ரஜினி ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடிப் போய் டிக்கெட் வாங்கும் காட்சிகள் நேற்று வெளியாகி சற்றே பயத்தை கிளப்பின. என்னதான் தலைவர் படமாக இருந்தாலும், ரசிகர்களின் சேஃப்டி ரொம்பவே முக்கியம் என்பதை தியேட்டர் ஓனர்களும் கருத்தில் கொண்டு ரசிகர்களை சரியாக வழிநடத்தி டிக்கெட் விற்பனைகளை செய்ய வேண்டும் என பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.
கர்நாடகாவில் கிங்டா: கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் டிக்கெட் புக்கிங் அமோகமாக உள்ளது. புதிய படங்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி முதல் நாளே பச்சை நிறமாக தியேட்டர் டிக்கெட் புக்கிங் காணப்பட்ட நிலையில், கூலி படத்தின் ரெட் போஸ்டர்கள் போல தற்போது டிக்கெட் புக் செய்யும் பக்கங்கள் எல்லாம் சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திலேயே காணப்படுகின்றன. உபேந்திரா நடித்துள்ள நிலையில், கர்நாடகாவிலும் அதிவேகத்தில் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேஜிஎஃப் 2வை விட அதிகம்: பெங்களூரில் வெறும் 37 நிமிடத்தில் 10 டிக்கெட்டுகள் அதிரடியாக விற்றுத் தீர்ந்துள்ளன. அதுவும் வெறும் 66 ஷோக்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் என கிறிஸ்டோபர் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். கேஜிஎஃப் 2 திரைப்படம் 45 நிமிடங்களில் 80 ஷோக்கள் போடப்பட்ட நிலையில், 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டது என்றும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் 50 நிமிடத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 300 ஷோக்கள் ஓபன் செய்யப்பட்ட நிலையில், விற்பனையானதாக குறிப்பிட்டுள்ளார்.
150 கோடி கன்ஃபார்ம்: கமல்ஹாசனின் தக் லைஃப், சூர்யாவின் ரெட்ரோ திரைப்படங்கள் எல்லாம் லைஃப் டைமாகவே தியேட்டர் கலெக்ஷன் 150 கோடி பண்ணவில்லை. இந்நிலையில், முதல் நாளே 150 கோடி வசூலை உலகளவில் கூலி படம் ஈட்டும் என்றும் லியோ படத்தின் 148 கோடி முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











