Coolie Box Office: 500 கோடி உறுதி.. 1000 கோடி டவுட்டு தான்.. லியோ முதல் நாள் வசூலை முந்துமா கூலி?
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் தலைவா என கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியாவது கோலிவுட்டின் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் படத்தை கொடுத்து விட மாட்டாரா என பலரும் ஏங்கித் தவித்து வரும் நிலையில், அதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
யஷ் நடிப்பில் கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டியது. தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் அந்த சாதனையை நிகழ்த்தியது.

ஆனால், தமிழில் இதுவரை பான் இந்தியா வெற்றியை எந்தவொரு படமும் பெறவில்லை. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அதை சாதித்தாக வேண்டும் என லோகேஷ் கனகராஜிடம் சொன்ன நிலையிலும், வார் 2 படம் ஒரே நாளில் மோதுவதால், அந்த படம் சொதப்ப வேண்டும் அல்லது அதை விட இந்தி ரசிகர்களை கவரும் அளவுக்கு கூலி படம் பான் இந்தியா படமாக இருந்தால் மட்டுமே இந்த சாதனை நடைபெறும் என்கின்றனர்.
லியோ வசூலை முந்த வாய்ப்பில்லை?: கூலி திரைப்படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் பலரும் தவிக்கும் நிலை உள்ளது. அந்தளவுக்கு அந்த படத்துக்கு உலகளவில் கிரேஸ் உள்ள நிலையிலும், முதல் நாள் உலகளவில் 80 முதல் 110 கோடி ரூபாய் தான் பாக்ஸ் ஆபீஸ் வசூல் வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை தாண்டி 148 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் அள்ளினால் தான் லியோ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை கூலி படத்தால் முந்த முடியும் என்கின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்புகள் குறைவு தான் என்கின்றனர்.
500 கோடி உறுதி: புஷ்பா 2, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் முதல் நாளில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டிய நிலையில் தான் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்தன. ஆனால், முதல் நாள் 110 கோடி அளவுக்கே ஓபனிங் வரும் என்கிற கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், 1000 கோடி வசூல் பெறுவது கஷ்டம் தான் என்றும் 500 கோடி வசூல் வருவது உறுதி என்றும் படம் எக்ஸ்ட்ராடினரியாக மவுத் டாக் வந்தால் மட்டுமே 1000 கோடி வசூலை நோக்கி நகர குறைந்தபட்ச வாய்ப்புகள் இருக்கும் என்கின்றனர்.
ஜெயிலர் 2: ஒருவேளை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்பார்க்கும் 1000 கோடி வசூல் சாதனையை கூலி திரைப்படம் நிகழ்த்தவில்லை என்றால், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படம் அடைய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். அதிகபட்சமாக கூலி திரைப்படம் 500 கோடி முதல் 700 கோடி வரை வசூல் ஈட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணிப்பை எல்லாம் தாண்டிய மேஜிக்கை லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. வெயிட் பண்ணுவோம் அந்த நல்ல செய்தி விரைவில் வர, ஆனால், தரவுகளின் படி அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது தான் கசப்பான உண்மை.


Click it and Unblock the Notifications











