Coolie Day 18 Box Office: 3வது ஞாயிற்றுக்கிழமையும் தாக்கு பிடித்த கூலி.. சூப்பர்ஸ்டார் பவர்ஹவுஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய படங்களே முதல் நாளில் 1 கோடி வசூல் செய்வதே பல படங்களுக்கு கடினமாக உள்ள நிலையில், 3வது வார ஞாயிற்றுக்கிழமையிலும் 3 கோடி ரூபாய் வசூலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் பெற்றுள்ளது அவரது ஸ்டார்டம்மை மட்டுமே காட்டுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹீர், நித்யா ராம், ஸ்ருதிஹாசன், சார்லி, லொள்ளு சபா மாறன், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான கூலி படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Coolie Day 18 Box Office Reports in Tamil Rajinikanth movie seems a good jump at 3rd sunday
Photo Credit:

பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடலுக்கு 3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் பல தியேட்டர்களில் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆட்டம் போட்டு படத்தை கொண்டாடி தீர்த்தனர். படம் வெளியாகி 18 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை கூலி திரைப்படம் இந்தியளவில் அள்ளியிருக்கும் வசூல் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

ரஜினிகாந்த் ராஜ்ஜியம்: சிவாஜிராவ் கெய்க்வாட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், 50வது ஆண்டில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ரசிகர்களின் பேராதரவு காரணமாக 3வது வாரமும் இந்தியளவில் தாக்குப் பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலை ஈட்டி வருகிறது.

3 வாரங்கள் தாக்குபிடித்த கூலி: இந்த ஆண்டு வெளியான பல பெரிய பட்ஜெட் படங்கள் நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியானால் 3 நாட்களுக்குப் பிறகு தாக்குப்பிடிக்காமல் இருந்து வந்த நிலையில், ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தொடர்ந்து 3 வாரங்கள் தாக்குப்பிடித்து கோடிகளில் வசூலை அள்ளி வருகிறது. கூலி படத்துக்குப் பிறகு வெளியான எந்தவொரு தமிழ்ப் படமும் பெரிதாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி 18 நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் மல்டி ஸ்டாரர்கள் படமாக வெளியான நிலையில், தொடர்ந்து இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 1.7 கோடி வசூல் செய்த கூலி திரைப்படம் சனிக்கிழமை 2.8 கோடி ரூபாயும் ஞாயிற்றுக்கிழமை 3 கோடி ரூபாயும் என மீண்டும் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை இந்தியளவில் கூலி திரைப்படம் 279 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏற்கனவே ஓவர்சீஸில் ஆரம்பத்திலேயே கூலி திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியுள்ள நிலையில், மொத்தமாக ஞாயிறு வசூலுடன் 500 கோடியை நெருங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

500 கோடி போஸ்டர் வருமா?: 4 நாட்களில் கூலி திரைப்படம் 404 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்ட நிலையில், அதன் பின்னர் 3 வாரங்களாக அமைதி காப்பது ஏன் என ரசிகர்களே தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் போஸ்டரை தினமும் சன் பிக்சர்ஸ் கூலி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என ப்ரோமோஷன் பண்ணும் போதெல்லாம் கேட்டு வருகின்றனர். கண்டிப்பாக இன்று 500 கோடிக்கும் அதிகமான வசூலை கூலி கடந்தது என்கிற போஸ்டர் வரும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர். சன் பிக்சர்ஸ் வெளியிடுமா என்பதை வெயிட் பண்ணிப்பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X